நேரடி டிவி ரிலீஸுக்கு ரெடியாகும் ஜி.வி பிரகாஷ் படம்!

ஜி.வி பிரகாஷ்

புலிக்குத்தி பாண்டி படம் பொங்கல் ஸ்பெஷலாக டிவி-யில் வெளியாகி, டி.ஆர்.பி-யில் முன்னணி இடத்தைப் பெற்றது.

 • Share this:
  ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம் நேரடியாக டிவி-யில் வெளியாகவிருக்கிறது.

  கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், திரைப்படங்களின் கவனம் ஓடிடி தளங்கள் பக்கம் திரும்பியது. ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷின் ‘பென்குயின்’, ‘மிஸ் இந்தியா’, விஜய் சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ போன்ற படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின. அதிலும் குறிப்பாக சூரரைப் போற்று திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

  தவிர இன்னும் சில படங்கள் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகின. விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி படம் பொங்கல் ஸ்பெஷலாக டிவி-யில் வெளியாகி, டி.ஆர்.பி-யில் முன்னணி இடத்தைப் பெற்றது.

  இந்நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் புதிய படம் ஒன்று நேரடியாக டி.வி.யில் வெளியாவதாக தகவல்கள் கூறுகின்றன. அந்தப் படத்தை ’சிவா மனசுல சக்தி’, ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் எம் இயக்குகிறார். ’பிகில்’ படத்தில் கால்பந்தாட்ட கேப்டனாக நடித்த அம்ரிதா ஐயர் ஹீரோயினாக நடிக்கிறார். அதோடு ஆனந்தராஜ், ரேஷ்மா, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

  படபிடிப்பை விரைவில் முடித்து, தமிழ் புத்தாண்டு (ஏப்ரல் 14) அல்லது உழைப்பாளர் தினத்தன்று (மே 1) நேரடியாக இந்தப் படத்தை டிவி-யில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்களாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: