Home /News /entertainment /

பேச்சுலர் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் ஜி.வி.பிரகாஷ்

பேச்சுலர் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘பேச்சுலர்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் அண்மையில் இசை அமைத்து, சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் வெகுவாக பாராட்டுகளைப் பெற்றது.

இதற்கு முன்னதாக வெளியான அசுரன் திரைப்படத்திலும் ஜி.வி.பிரகாஷின் இசை பெரிதும் பாராட்டப்பட்ட நிலையில் நடிகராகவும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடித்துள்ள ‘பேச்சுலர்’ திரைப்படத்திலிருந்து ‘காதல் கண்மணி’ என்ற பாடலை முதல் சிங்கிளாக படக்குழுவினர் டிசம்பர் 10-ம் தேதி மாலை 7 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

சதீஷ் செல்வகுமார் என்று புதுமுக இயக்குநர் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகியுள்ளதோடு காதலினால் ஏற்படும் பிரச்னைகளையும் பிரதானப்படுத்தி உருவாகியுள்ளது. கோவையைச் சேர்ந்த மாடல் நடிகையான திவ்யபாரதி ஜி.வி.க்கு ஜோடியாக நடித்துள்ளார்.



ராட்சசன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி இந்தப் படத்தை தயாரித்துள்ளது. படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் 2021-ம் ஆண்டு காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க: நில மோசடி புகார் : சூரியை விசாரணைக்கு ஒத்துழைக்கச் சொன்ன நீதிமன்றம்

பேச்சுலர் படம் தவிர்த்து அடங்காதே, ஜெயில், காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட பல படங்கள் ஜி.வி.பிரகாஷ் படங்கள் நடிப்பில் திரைக்கு வர தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published:

Tags: G.V.Prakash, Kollywood

அடுத்த செய்தி