கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் உடன் கவுதம் மேனன் இணைந்துள்ளார்.
இசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்று இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம்.
இந்தப் படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலக, தற்போது 'டிஜி ஃபிலிம் கம்பெனி' என்ற புதிய நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மாவுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் உடன் கவுதம் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. மேலும் வாகை சந்திரசேகர், அறிமுக நாயகன் குணா மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன், திரில்லர் கலந்து திரைக்கதையாக உருவாக்கி வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார்.
விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். இறுதி கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.