இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்குத் தேர்வான கல்லி பாய்!

news18
Updated: September 21, 2019, 10:48 PM IST
இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்குத் தேர்வான கல்லி பாய்!
கல்லி பாய்
news18
Updated: September 21, 2019, 10:48 PM IST
ஆஸ்கர் விருது விழாவுக்கு சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவுக்கு அனுப்பவதற்கு இந்திய சார்பில் ரன்வீர் சிங் நடித்த கல்லி பாய் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ரன்வீர் சிங், ஆலியா பட், நடிப்பில் சோயா அக்தர் இயக்கியிருந்த படம் கல்லி பாய். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படம், 220 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்தியாவில் மட்டும் 165 கோடி ரூபாய் வரை வசூலித்தது. விமர்சன ரீதியிலும் அந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.


Loading...


மும்பை நகரில் வசிக்கும் ஏழை இளைஞனின் இசைக் கனவு பற்றிய படம். தற்போது, இந்தப் படம் 92-வது ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் இந்தியா சார்பில் அனுப்பவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கர் தேர்வுக்காக தமிழிலிருந்து வட சென்னை, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

Also see:

First published: September 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...