இரண்டு மொழிகளில் வெளியாகும் சோனியா அகர்வாலின் ஹாரர் படம்...!

நடிகை சோனியா அகர்வால்

ஜிஎம்ஏ ஃபிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ், விநாயக சுனில் ஆகியோர் கிராண்மாவை தயாரிக்கிறார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஹாரர் படங்களின் சீஸன் இன்னும் முடியவில்லை. முகம் தெரிந்த நடிகையோ, நடிகரோ கிடைத்தால் ஹாரர் படம் எடுக்கிறேன் என்று கிளம்பிவிடுகிறார்கள். கரோனா பேரிடர் காலத்தில் இதுபோன்ற படங்களே பலருக்கும் வாழ்வளிக்கின்றன.

சோனியா அகர்வால் நடிப்பில் தமிழ், மலையாளத்தில் கிராண்மா என்ற ஹாரர் படம் தயாராகிறது. சோனியா அகர்வாலுடன் ஸ்ரீதா சிவதாஸ், ஹேமந்த் மேனன், மாலா பார்வதி ஆகியோர் நடிக்கின்றனர். படத்தை சிஜின் லால் இயக்குகிறார்.

Also read... ஓடிடியில் வெளியான நயன்தாரா படம்...!

கடந்த வருடங்களில் மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஹாரர் படங்கள் லாபம் சம்பாதித்தன. ஓடிடி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை இதுபோன்ற படங்களுக்கு தடையில்லாமல் கிடைக்கிறது. தமிழ், மலையாளம் எனும் போது இரட்டை வருமானம்

ஜிஎம்ஏ ஃபிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ், விநாயக சுனில் ஆகியோர் கிராண்மாவை தயாரிக்கிறார்கள். ஷ்யாம் அம்பாடி ஒளிப்பதிவு செய்ய, கதை, திரைக்கதையை ஷிபி எழுதியுள்ளார். கிராண்மாவின் பர்ஸ்ட் லுக்கை நடிகை விமலா ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: