• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'இளையராஜா 75' நிகழ்ச்சி... ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைக்கிறார்

'இளையராஜா 75' நிகழ்ச்சி... ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைக்கிறார்

இளையராஜா - விஷால்

இளையராஜா - விஷால்

பிப்ரவரி 2-ஆம் தேதி நடக்கும் 'இளையராஜா 75' நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

  • News18
  • Last Updated :
  • Share this:
தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் 'இளையராஜா 75' விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைக்கிறார்

இசைஞானி இளையராஜாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அவருடைய 75-வது பிறந்த நாளைக் குறிப்பிடும் வகையில் 'இளையராஜா 75' என்ற நிகழ்ச்சியை திரைத்துறையினர் நடத்துகிறார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் நடக்கும் நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் வருகை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், திரைப்பட துறையில் உள்ள முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் விழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.



தற்போது தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொது செயலாளர்கள் கதிரேசன் மற்றும் SS துரைராஜ் ஆகியோர் ராஜ்பவனிற்கு சென்று ஆளுநரை நேரில் சந்தித்து விழாவை துவங்கி வைக்க அழைத்துள்ளனர். அவர்களின் அழைப்பை ஏற்று, பிப்ரவரி 2-ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். மேலும், 'இளையராஜா 75' என்ற விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்.



‘இளையராஜா 75’ நிகழ்ச்சியில் முன்னணி கதாநாயகர்கள், கதாநாயகிக, பின்னணிப் பாடகர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு பார்வையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறார்கள். தற்போது நிகழ்ச்சிக்கான ஒத்திகையும், அரங்க ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. பிப்ரவரி 3-ஆம் தேதி இசைஞானி இளையராஜா நேரடி இசை விருந்து அளிக்கிறார்.

Also watch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Prabhu Venkat
First published: