Home /News /entertainment /

’மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட அரசு பேச்சுவார்த்தை நடத்தும்’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ..

’மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட அரசு பேச்சுவார்த்தை நடத்தும்’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ..

மாஸ்டர் போஸ்டர் | அமைச்சர் கடம்பூர் ராஜூ

மாஸ்டர் போஸ்டர் | அமைச்சர் கடம்பூர் ராஜூ

மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட வலியுறுத்தி அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்தை தயாரிப்பாளர்கள் OTT-யில் வெளியிட முடிவு செய்தால் திரையரங்கில் வெளியிட வலியுறுத்தி தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் வானகம்  திரைப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. அதில் அமைச்சர் கடம்பூர் ராஜு, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி, இயக்குனர் சங்க தலைவர் ஆர்கே செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு மாஸ்டர் திரைப்படத்தை அதன் தயாரிப்பாளர்கள் ஊட்டியில் வெளியிட முடிவு செய்தால் திரையரங்குகளில் அதனை வெளியிட வலியுறுத்தி தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறினார்.

Also read: வெற்றிமாறன் - சூரி படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா சட்டப்பேரவையில் இறுதியாக ஆற்றிய உரை சினிமா துறை தொடர்பானது என்று நினைவு கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜு, பல காலமாக நிலுவையில் இருக்கும் திரைத்துறை விருதுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா திட்டமிட்டதாக கூறினார். பின்னர் ஊரடங்கு காரணமாக அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக அவர் கூறினார். எம்.ஜி.ஆர் பிறந்த நாளான ஜனவரி 17-ஆம் தேதி இந்த விருது நிகழ்ச்சியை பிரமாண்ட விழாவாக நடத்த அரசு திட்டமிட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published:

Tags: Actor vijay, Master

அடுத்த செய்தி