சிம்புவிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய பிரபல நடிகர்! - வீடியோ

சிம்பு

  • News18
  • Last Updated :
  • Share this:
நடிகர் சிம்புவிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய கவுதம் கார்த்திக், அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

சிம்பு - வெங்கட் பிரபு இணையும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் ஹிட் அடித்த படம் ‘மப்டி’. 'மப்டி' படத்தை இயக்கிய நார்தன் இந்தத் திரைப்படத்தையும் இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கிறார்.

‘தயாரிப்பு எண் 20’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.படப்பிடிப்புக்கு மத்தியில் நடிகர் கவுதம் கார்த்திக் சிம்புவிடம் ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், நடிகர் சிம்பு மனிதநேயம் உள்ளவர் என்றும், அவருடைய ரசிகனாக அவருடன் நடிப்பதில் பெருமை என்றும் கூறியுள்ளார்.இந்தப் படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டராக நடிக்கிறார். சிம்பு - கவுதம் கார்த்திக் இணைந்திருப்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வீடியோ பார்க்க: நீட் தேர்வு - நடிகை ஜோதிகா கேள்வி

Published by:Sheik Hanifah
First published: