பிக்பாஸ் பிரபலங்கள் இணைந்து நடித்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு - உற்சாகத்தில் ரசிகர்கள்!

கூகுள் குட்டப்பன்

இந்த படம் முழுவதும் தென்காசியில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில காட்சிகளை எடுக்க வேண்டி இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

  • Share this:
தமிழில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் பெறாதவரை பெற்ற பிரபலங்களில் தர்ஷனும், லெஸ்லியாவும் அடங்குவர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரியும். மேலும் இந்த படம் எப்போது திரைக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ட்ரீட் கொடுத்துள்ளது படக்குழு.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டியில் வெளியேற்றப்பட்ட தர்ஷனுக்கு ரசிகர்களின் பெரிய ஆதரவு கிடைத்தது. இதையடுத்து அவர் சில படங்களில் கமிட்டானார். மேலும் கமலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படம் நடிக்கவும் கமிட்டானார். அதே சீசனில் பங்கேற்ற லாஸ்லியாவும் இளசுகளின் பேராதரவை பெற்றார். இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த அவருக்கு, தமிழ் சினிமாவில் நுழைய வாய்ப்பு கிடைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் இவர் நடித்து வந்த Friendship படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர், ட்ரைலர் வெளியான நிலையில், லாஸ்லியாவின் இரண்டாவது படத்தின் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரில் இயக்குனர் கேஎஸ்.ரவிக்குமார், யோகி பாபு, தர்ஷன், லாஸ்லியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஒரு குட்டி ரோபோவும் உள்ளது.

மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் தான் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்'. 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகள் கிடைத்தன. இந்த நிலையில் இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், படத்தை தயாரித்து வருகிறார். மேலும் படத்திற்கு 'கூகுள் குட்டப்பா' என பெயரிட்டு அதில் நடித்தும் வருகிறார்.

Also read... தனக்காக பிரார்த்தனை செய்ய ரசிகர்களிடம் கேட்ட சூப்பர் சிங்கர் புகழ் சௌந்தர்யா - என்ன காரணம்?

'கூகுள் குட்டப்பா' படத்தை கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்து வரும் சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். இதில் சுராஜ் கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், செளபின் கதாபாத்திரத்தில் தர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், லாஸ்லியா, யோகி பாபு, மனோபாலா, மாரியப்பன், ப்ராங்ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் முழுவதும் தென்காசியில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில காட்சிகளை எடுக்க வேண்டி இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்வி, இசையமைப்பாளராக ஜிப்ரான், பாடலாசிரியராக மதன் கார்க்கி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். எனவே, விரைவில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலையாளத்தில் செம ஹிட் கொடுத்த இந்த படம், தமிழிலும் ஹிட் கொடுக்குமா எதிர்பார்ப்பில் தர்ஷன், லாஸ்லியா ரசிகர்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: