தெய்வமகள் சீரியல் நடிகை கொடுத்த அப்டேட் - ரசிகர்கள் மகிழ்ச்சி!

தெய்வமகள் சீரியல்

தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் தெய்வ மகள் சீரியல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, தற்போது ஜெமினி சூர்யா தொலைக்காட்சிகளில் ஒளிபரப?

 • Share this:
  சின்னத்திரையில் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பரப்பாகி வெற்றித் தொடர் வரிசையில் இடம் பிடித்த சீரியல் ‘தெய்வ மகள்’. சன் தொலைக்காட்சியில் 2013ம் ஆண்டு முதல் 2018 ஆண்டு வரை 1400 எபிசோடுகளைக் கடந்து வெற்றிகரமாக ஓடி நிறைவுப் பெற்றது. அப்போதைய காலக்கட்டத்தில் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் தெய்வ மகள் சீரியல் முன்னணியில் இருந்தது. இந்தத் தொடரில் நடிகை வாணிபோஜன் லீட் ரோலில் நடித்தார். அவருடன் கிருஷ்ணா, ரேகா கிருஷ்ணப்பா உள்ளிட்டோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்தனர்.

  தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் தெய்வ மகள் சீரியல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, தற்போது ஜெமினி சூர்யா தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. லீட் ரோலில் நடித்த வாணிபோஜன், தெய்வ மகள் சீரியல் மூலம் கிடைத்த புகழின் காரணமாக வெள்ளித்திரையிலும் அடியெடுத்து வைத்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் வாணி போஜனின் இரண்டாவது தங்கையாக நடித்தவர் நடிகை உஷா ஷாய். அவர் தான் தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார்.

  கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள உஷா ஷாய், தான் தாய்மை அடைந்திருப்பதாக கூறியுள்ளார். அவருடைய இந்த மகிழ்சியான செய்திக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்தைகளை மனதார தெரிவித்து வருகின்றனர்.  தனக்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் வாழ்த்துகளை நினைத்து மகிழ்ச்சியில் உள்ளார் உஷா ஷாய். அதேநேரத்தில், இந்த சீரியலில் வில்லியாக பட்டையைக் கிளப்பிய காயத்திரி, லேட்டஸ்ட் டிரஸ்ஸிங்கில் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

  ALSO READ |  சித்தி 2 சீரியலில் என்டிரி கொடுத்த புதிய நடிகை - இவர் யார் தெரியுமா?

  தெய்வ மகள் சீரியல் முடிவடைந்தாலும், அந்த சீரியல் கதாப்பாத்திரங்களாகவே அவர்கள் இன்றளவும் அறியப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தெய்வமகள் சீரியலில் காயத்திரியாக நடித்த இவரின் உண்மையான பெயர் ரேகா குமார். சீரியலில் வில்லியாக அசத்தினாலும், நிஜத்தில் கதாப்பாத்திரத்துக்கு நேர்மாறானவராக இருக்கிறார். இது குறித்து அவர் பேசும்போது, சீரியலில் மட்டுமே வில்லி, நிஜத்தில் நான் அப்படியல்ல என கூறியுள்ளார். தெய்வ மகள் சீரியல் மூலம் கிடைத்த அன்பு தன்னை வியக்க வைப்பதாகவும், இதேபோன்ற கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்த நடிக்க இருப்பதாகவும் ரேகா குமார் தெரிவித்துள்ளார்.

  Rekha kumar
  ரேகா குமார்


  நடிப்பில் இவ்வளவு வரவேற்பு கிடைத்தற்கு கணவர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு மிக முக்கிய பங்கு இருப்பதாக ரேகா குமார் தெரிவித்துள்ளார். "திருமணத்துக்கு முன்பு என்னை வரன் பார்க்க வரும்போது, திருமணமான பிறகு நடிக்கக்கூடாது என மாமியார் என கூறியிருந்தார்.

  ALSO READ |  மாலத்தீவு டூர் நினைவுகளை நீச்சல் குளத்தில் இருக்கும் ஃபோட்டோவுடன் பகிர்ந்து கொண்ட டிடி!

  ஆனால், திருமணத்துக்குப் பிறகு தனக்கு இருக்கும் நடிப்பு ஆர்வத்துக்கு அவர்கள் தடை விதிக்கவில்லை. என்னுடைய நடிப்புக்கு முதல் ரசிகர் என் கணவர். பெங்களூரில் மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் படித்தேன். அப்போதே எனக்கு நடிப்பு மீது ஆர்வம் இருந்து இயக்குநர் ஒருவரிடம் வாய்ப்பு கேட்டேன். அப்போது கிடைக்கவில்லை. சிறிது நாளுக்கு பின்னர் அதே இயக்குநரிடம் இருந்து அழைப்பு வந்து வாய்ப்பு வழங்கினார்" என ரேகா குமார் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: