Home /News /entertainment /

நாகினி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

நாகினி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

நாகினி சீரியல்

நாகினி சீரியல்

மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் நாகினி தொடர் தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

சின்னத்திரை நிகழ்ச்சிகள் பல வகைகளில் இருந்தாலும் மக்களின் மனதை கவரும் விதமாக இருக்க கூடிய தொடர்கள் நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும். அந்த வகையில் குடும்ப பாங்கான சீரியல்கள் பெரும்பாலும் மக்களுக்கு பிடித்தவையாக இருக்கும். அதே போன்று பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளும் இந்த வரிசையில் சேரும். இதில் ரியாலிட்டி ஷோக்கள் என்றால் அதை எல்லா வகையான ஆடியன்சும் விரும்பி பார்ப்பார்கள்.

அந்த வகையில், ஒரு தொடரானது சீரியல் போலவும், ரியாலிட்டி வகையைப் போலவும் இருந்தால் அதை பார்க்கின்ற மக்களுக்கு நிச்சயம் டபுள் சந்தோஷம் தான். ஆம், சீரியல்களை பொறுத்த வரையில் அதிக பொழுதுபோக்காகவும், பார்கின்றவர்களை உற்சாகமூட்டும் படியாகவும் இருந்தால் அது மிக விரைவிலேயே வெற்றி பெற்று விடும். அந்த வரிசையில் நாகினி தொடர் எல்லா தரப்பு மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த சீரியலில் இருக்கின்றது. அதன் முக்கிய வெளிப்பாடு, சீரியல் பல பாகங்கள் எடுக்கப்பட்டு அனைத்து பாகங்களுமே வெற்றி பெற்றது தான்.

நாகினி சீரியல் ஆரம்பித்த நாட்களில் இருந்தே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி பார்க்க தொடங்கினர். இதுவரை பாம்பைக் கொண்டு பல தொடர்கள் எடுத்திருந்தாலும் இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு மற்ற சீரியல்களை விடவும் அதிகம். நாகத்தை மையமாக கொண்டு தமிழில் பல்வேறு தொடர்கள் உள்ளன. ஆனாலும் இந்தியில் உருவான இந்த நாகினி சீரியலுக்கு அதிக தமிழ் ரசிகர்கள் உண்டு. 2015 ஆம் ஆண்டு நாகினி சீரியலின் முதல் பாகம் இந்தியில் எடுக்கப்பட்டு ஒளிபரப்பானது. இந்தி ரசிகர்கள் பலர் இந்த சீரியலை கொண்டே தங்களது பொழுதை கழித்து வந்தனர்.

இதையும் படியுங்கள் :   சின்னத்திரை டி.ஆர்.பி-யை தட்டித்தூக்கிய Roja... இந்திய அளவில் சாதனை! 

மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் நாகினி தொடர் தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. எதிர்பார்த்ததை விடவும் இந்த தொடருக்கு மக்களிடம் இருந்து மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அதன்படி 5 பாகங்கள் நாகினி தொடரில் வெற்றிகரமாக முடிவு பெற்றது. இதன் ஆறாம் பாகத்தை எதிர்பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது குட் நியூஸ் வந்துள்ளது. ஆம், நாகினி ஆறாம் பகுதி மிக விரைவில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

வரும் மார்ச் 6 ஆம் தேதி அன்று நாகினி சீசன் 6 ஒளிபரப்பாகி தனது ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. மேலும் மார்ச் 6 ஆம் தேதி அன்று நாக பஞ்சமி என்பதால் ஸ்பெஷல் பிரீமியர் ஷோவாக 2 மணி நேரங்கள் இது ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் அன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு நிகழ்ச்சியாக இரவு 8-10 மணி வரை ஒளிபரப்பாகும். இந்தியில் இதன் ஆறாம் பாகமானது கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி அன்று ஒளிபரப்பானது. சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், கோவிட்-19 தொற்றுநோயில் இருந்து நம் நாட்டை காப்பாற்ற நாகினி பிறப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே இந்த சீசன் மிகவும் புதுமையாக இருக்க கூடும் என்று எதிர்பார்க்கலாம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published:

Tags: TV Serial

அடுத்த செய்தி