திடீரென நிறுத்தப்பட்ட ஜீ தமிழின் கோகுலத்தில் சீதை சீரியல் - ஏன் தெரியுமா?

கோகுலத்தில் சீதை சீரியல்

மக்களை மகிழ்வித்து வரும் இந்த சீரியல் தற்போது திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் சின்னத்திரை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  • Share this:
வித்தியாசமான மற்றும் விறுவிறுப்பான சீரியல்களை ஒளிபரப்பி மக்களை கவருவதில் ஆர்வம் காட்டி வரும் முன்னணி தமிழ் டிவி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ரியாலிட்டி ஷோக்கள், நிகழ்ச்சிகள் என ஜீ தமிழில் ஒளிபரப்பபட்டாலும் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென்று எப்போதும் ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. அதற்கு ஏற்றவாறு சுவாரஸ்யமான கதை அம்சங்களை கொண்ட சீரியல்களை சின்னத்திரை ரசிகர்களுக்காக ஒளிபரப்பி வருகிறது ஜீ தமிழ் சேனல்.

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் கடந்த 2019 நவம்பர் முதல் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியலில் ஒன்று கோகுலத்தில் சீதை. வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த சீரியலில் டான்ஸ் மாஸ்டர் நந்தா, அர்ஜுன் என்ற கேரக்ட்ரில் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகை ஆஷா கவுடா, வசுந்தரா (வசு) என்றார் கேரக்டரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர்களை தவிர இந்த சீரியலில் நடிகை நளினி, காந்திமதி என்ற பாட்டி கேரக்டரில், காயத்திரி,ஷங்கரேஷ்குமார், லஸ்யா நாகராஜ், கௌசல்யா செந்தாமரை, விஜய் கிருஷ்ணராஜ், வீணா வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அர்ஜுன் - வசுந்தரா ஜோடிக்கு சின்னத்திரை ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தனக்கு சிறிய வயதில் உதவிய சிறுமியையே மனதில் நினைத்து காதல் கொள்கிறார் அர்ஜுன். தற்போது அர்ஜுனின் கம்பெனியிலேயே வேலைக்கு சேர்ந்துள்ளார் வசுந்தரா.

தான் விரும்பும் பெண் வசுந்தரா தான் என்பதை அஜுன் அறியவில்லை. ஆனால் செய்ய வயதில் தான் உதவிய நபர் தான் அர்ஜுன் என்பதை வாசு தெரிந்து கொள்கிறார். இதனிடையே அர்ஜுனின் பால்ய வயது தோழி தான் தான் என அர்ஜுனனையும், அவரது குடும்பத்தையும் நம்ப வைத்துள்ளார் இனியா என்ற குற்றவழக்குகளில் தொடர்புடைய பெண்.

Also read... கேப்டன் இந்தியா ஒரிஜினல் அல்ல - தயாரிப்பாளர் புகார்!

இனியா எனும் பெண் பல்வேறு திருட்டுகளில் சம்பந்தமுள்ள பெண் தான் தான் அர்ஜூனின் சின்னவயது பிரண்டு என்று அந்த வீட்டிற்குள் வந்து நம்ப வைத்திருக்கிறார். இந்த இனியா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் வினிதா ஜெகநாதன். தனது உண்மையான பால்ய சினேகிதி வசு என்பது அர்ஜுனுக்கு தெரிய வருமா. வீட்டை விட்டு இனியா விரட்டப்படுவாரா, அர்ஜுன் - வசு திருமணம் கை கூடுமா என்ற கோணங்களில் கதை விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

மக்களை மகிழ்வித்து வரும் இந்த சீரியல் தற்போது திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் சின்னத்திரை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் கோகுலத்தில் சீதை சீரியல் முற்றிலும் நிறுத்தப்படவில்லை தற்காலிகமாக ஒரு வாரத்திற்கு தான் நிறுத்தப்பட்டுள்ளது என்ற தகவல் சீரியல் ரசிகர்களை நிம்மதி கொள்ள செய்துள்ளது. சீரியல் ஹீரோயின் நடிகை ஆஷா கவுடாவிற்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, திட்டமிட்டபடி ஷூட்டிங் நடைபெறவில்லை என்றும், விரைவில் அவர் குணமாகி வந்ததும் மீண்டும் ஷூட்டிங் துவக்கப்பட்டு அடுத்த வாரம் முதல் மீண்டும் கோகுலத்தில் சீதை ஒளிபரப்பாகும் என்றும் சேனல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
Published by:Vinothini Aandisamy
First published: