Home /News /entertainment /

’இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ - கமலின் பேச்சுக்கு அஜித் பட வில்லன் எதிர்ப்பு

’இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ - கமலின் பேச்சுக்கு அஜித் பட வில்லன் எதிர்ப்பு

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

கலையைப் போன்றே தீவிரவாதத்துக்கும் மதம் கிடையாது. கோட்சேவை நீங்கள் தீவிரவாதி என்று குறிப்பிடலாம். ஏன் இந்து என்று குறிப்பிடுகிறீர்கள். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வாக்குக்காக அவ்வாறு பேசினீர்களா?.

  • News18
  • Last Updated :
    நாதுராம் கோட்சே குறித்த கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

    திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரவக்குறிச்சியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து நேற்று கமல் பரப்புரையில் ஈடுபட்டார்.

    அப்போது பேசிய அவர், ’இஸ்லாமியர்கள் அதிகம் பேர் இருக்கும் இடம் என்பதால் சொல்லவில்லை; காந்தி சிலைக்கு முன் சொல்கிறேன்.. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே என்றார். மேலும் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரனாக, அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருப்பதாக தெரிவித்தார். சமரச இந்தியா மற்றும் சமமான இந்தியாவுக்கு எதிரான போக்கு காந்தி கொலையிலிருந்தே தொடங்குவதாக கமல் குறிப்பிட்டார்.

    கமல்ஹாசனின் இந்த பேச்சு சர்ச்சையாகியுள்ளதோடு பா.ஜ.கவினர் கடும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் பாஜக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அஜித்துடன் விவேகம் படத்தில் வில்லனாக நடித்திருந்த விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பதிவில், “அன்புள்ள கமல்ஹாசன். நீங்கள் தலைசிறந்த படைப்பாளி. கலையைப் போன்றே தீவிரவாதத்துக்கும் மதம் கிடையாது. கோட்சேவை நீங்கள் தீவிரவாதி என்று குறிப்பிடலாம். ஏன் இந்து என்று குறிப்பிடுகிறீர்கள். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வாக்குக்காக அவ்வாறு பேசினீர்களா?. ஒரு நடிகனின் வேண்டுகோள். தயவு செய்து இந்த நாட்டை பிரிக்க வேண்டாம். நாம் அனைவரும் ஒன்றுதான்” என்று கூறியுள்ளார்.



    பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்று கதையான பிஎம் நரேந்திரமோடி படத்தில் நாயகனாக நடித்திருந்தார் என்பதோடு தீவிர பாஜக ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    VIDEO: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து - கமல்ஹாசன்

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Kamal hassan

    அடுத்த செய்தி