காட் மேன் வெப்சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு; நேரில் ஆஜராக சம்மன்
காட் மேன் வெப் சீரிஸின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர்.

காட்மேன்.
- News18 Tamil
- Last Updated: June 1, 2020, 4:50 PM IST
காட் மேன் வெப் சீரிஸின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள வெப்சீரிஸ் காட்மேன். இதை விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இத்தொடர் ஜீ5 தளத்தில் ஜுன் 12-ம் தேதி வெளியிட இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து டீசரும் வெளியானது.
இந்த டீசர் காட்சி வெளியானதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகின. டீஸரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் பிராமண சமூகத்திற்கு எதிரானதாகவும், பாலுணர்வைத் தூண்டக் கூடிய வகையிலும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான காட்சிகள் நீக்கப்பட்டு புதிய டீசரும் வெளியிடப்பட்டது. இருப்பினும் அமெரிக்கை நாரயணன் மற்றும் பா.ஜ.கவைச் சேர்ந்த அஸ்வத்தாமன், நாராயணன் ஆகியோர் ஆன்லைன் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், தயாரிப்பாளர் இளங்கோவன் மற்றும் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சாதி, மத விரோத உணர்வைத் தூண்டுதல், மத உணர்வை கொச்சைப்படுத்துதல், திட்டமிட்டு வதந்தி பரப்புதல், திட்டமிட்டு அவதூறு பரப்புதல், திட்டமிட்டு அச்சம் விளைவித்தல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யதுள்ளனர்.
மேலும், இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோவன் நடிகர் டேனியல் பாலாஜி, நடிகை சோனியா ஆகர்வால் ஆகியோர் ஜூன் 3-ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
மேலும் படிக்க: 3 பேருக்காக ஒரு விமானத்தையே புக் செய்தேனா? அக்ஷய்குமார் அதிரடி விளக்கம்
ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள வெப்சீரிஸ் காட்மேன். இதை விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இத்தொடர் ஜீ5 தளத்தில் ஜுன் 12-ம் தேதி வெளியிட இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து டீசரும் வெளியானது.
இந்த டீசர் காட்சி வெளியானதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகின. டீஸரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் பிராமண சமூகத்திற்கு எதிரானதாகவும், பாலுணர்வைத் தூண்டக் கூடிய வகையிலும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான காட்சிகள் நீக்கப்பட்டு புதிய டீசரும் வெளியிடப்பட்டது.