ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'இதெல்லாம் ஒரு படமா? அதிர்ச்சியா இருக்கு..' திரைப்பட விழாவில் 'காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை கடுமையாக விமர்சித்த நடுவர்!

'இதெல்லாம் ஒரு படமா? அதிர்ச்சியா இருக்கு..' திரைப்பட விழாவில் 'காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை கடுமையாக விமர்சித்த நடுவர்!

காஷ்மீர் ஃபைல்ஸ்

காஷ்மீர் ஃபைல்ஸ்

9 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், 79 நாடுகளைச் சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Goa, India

கோவா-வில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அதில் திரையிடப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் நாகரீகமற்றது என்று திரைப்பட விழா நடுவர் கூறியிருக்கிறார்.

53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவா தலைநகர் பனாஜி-யில் நடைபெற்றது. 9 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், 79 நாடுகளைச் சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்றிரவு நடைபெற்றது.

இதில் சிறந்த திரைப்படமாக ஸ்பெயின் மொழி படம் தேர்வுசெய்யப்பட்டது. இதேபோல, சிறந்த நடிகர், நடிகைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டுக்கான திரையுலக பிரபலம் விருதை, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்கினார்.

நிறைவு விழாவில் பேசிய திரைப்பட விழா தலைமை நடுவரான இஸ்ரேல் திரைப்பட இயக்குநர் நாதவ் லபிட், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 1990-ம் ஆண்டில் ஏராளமானோர் கொல்லப்பட்டது தொடர்பான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை திரையிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

இது பிரச்சாரம் செய்யும் வகையிலானது மற்றும் நாகரீகமற்ற திரைப்படம் என்றும் விமர்சித்தார். இதனைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்ததாக அவர் கூறினார். இதுபோன்ற திருவிழாவில் இந்தப் படத்தை திரையிடுவது பொருத்தமானதாக இல்லை என்றும் அவர் விமர்சித்தார். விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது என்பது கலை மற்றும் வாழ்க்கையில் அவசியமானது என்பதால், தனது கருத்தை வெளிப்படுத்துவதாகவும் நாதவ் லபிட் கூறினார்.

First published:

Tags: Goa Film Festival, IFFI, The Kashmir Files