• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எஃப்ஐஆரில் ஏ1-ஆக ஆர்யா உள்ளார்: சைபர் க்ரைம் போலீஸ் ஆதரவாக செயல்படுகிறதா? ஜெர்மனி பெண்ணின் வழக்கறிஞர் கேள்வி

எஃப்ஐஆரில் ஏ1-ஆக ஆர்யா உள்ளார்: சைபர் க்ரைம் போலீஸ் ஆதரவாக செயல்படுகிறதா? ஜெர்மனி பெண்ணின் வழக்கறிஞர் கேள்வி

ஆர்யா

ஆர்யா

மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் ஆர்யா முதல் குற்றவாளியாக உள்ளார் என்று ஜெர்மனி பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சமூக வலைதளம் மூலமாக நடிகர் ஆர்யா தன்னிடம் பழகி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 70 லட்ச ரூபாய் பெற்று கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஜெர்மனியைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 10 ஆம் தேதி ஆர்யாவை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து கடந்த 24 ஆம் தேதி ஆர்யா போல் நடித்து ஜெர்மனி பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டதாக புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹுசைனி பையாக் ஆகியோரை மத்திய குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கிற்கும் ஆர்யாவிற்கும் தொடர்பில்லை என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கைதான இருவரும் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த போது ஜாமீன் மனு ரத்து செய்ய வாதிட்டபோது வழக்கை வியாழக்கிழமை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து ஜெர்மனி பெண் தரப்பு வழக்கறிஞரான ஆனந்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஆர்யா போல் நடித்து மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இருவரும் 3வது மற்றும் 4 ஆவது குற்றவாளி என கூறிய அவர், முதல் குற்றவாளியாக ஆர்யா மற்றும் இரண்டாவது குற்றவாளியாக ஆர்யாவின் தாயார் ஜமீலாவின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேர்த்துள்ளதாகவும் அவர்கள் இன்னும் கைது செய்யாமல் இருப்பதாக அவர் கூறினார்.

ஜெர்மனி பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆர்யா மீது மோசடி புகார் அளித்த நிலையில், ஆர்யா தன்னை போல நடித்து ஏமாற்றியதாக ஒரு புகாரும் அளிக்கவில்லை எனவும் கைது செய்யப்பட்ட இருவர் மீது அவர் எந்த விதமான புகாரும் இதுவரை அளிக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அவர், ஜெர்மனி பெண்ணிடம் ஆர்யா வீடியோ காலில் பேசிய அனைத்து ஆதாரங்களையும் வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் கேட்டு கடிதம் எழுதி இருப்பதாகவும், ஆர்யா பேசிய அனைத்து மெசேஜ்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆர்யா தனது செல்போன் எண்ணில் ஜெர்மனி பெண்ணிடம் பேசி, நட்சத்திர அந்தஸ்தில்தான் இருப்பதால் தனது மேலாளர் முகமது அர்மான், ஹூசைனி வங்கி கணக்கில் பணத்தை பெற்ற ஆதாரங்களும் தங்களிடம் இருப்பதாக அவர் கூறினார்.

உடனடியாக ஆர்யா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அவர் கூறினார். கடந்த 24ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் அளித்த அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில் "இந்த வழக்குக்கும் ஆர்யாவுக்கும் சம்பந்தம் இல்லையெனவும், மேலும் ஆர்யாவின் பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்யப்பட்டிருப்பதாகவும்" மட்டுமே தெரிவித்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் தற்போது முதல் தகவல் அறிக்கை வெளியாகி அதில் ஆர்யா முதல் குற்றவாளியாகவும் அவரது தாயார் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது. இதைப் பற்றி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அளித்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்படவில்லை. ஆர்யாவுக்கு சைபர் கிரைம் போலீசார் ஆதரவாக செயல்படுகின்றதா? என வழக்கறிஞர் ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: