மறைந்த பிரபல நடன இயக்குநரான ரகுராமின் மகளான காயத்ரி ரகுராம் சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து விசில், வானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவர் நடன இயக்குநராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் யாதுமாகி நின்றாய் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஆசைப்படும் பெண் ஒருவர் சென்னைக்கு வந்து குரூப் டான்சரான கதையை யாதுமாகி நின்றாய் என்ற டைட்டிலில் படமாக்கியுள்ள காயத்ரி ரகுராம், அதில் தானே நடித்துள்ளார். இத்திரைப்படத்துக்கு அஸ்வின் வினாயக மூர்த்தி இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீஸ் தள்ளிப் போன நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் 19-ம் தேதி அன்று யாதுமாகி நின்றாய் திரைப்படம் வெளியாக உள்ளது. தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
காயத்ரி ரகுராமின் யாதுமாகி நின்றாய் வெளியாகும் அதே நாளில் அமேசான் பிரைம் தளத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள பெண்குயின் திரைப்படமும் வெளியாகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.