விமர்சனத்தால் சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம்

news18
Updated: April 16, 2018, 3:56 PM IST
விமர்சனத்தால் சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம் - நடன இயக்குநர்
news18
Updated: April 16, 2018, 3:56 PM IST
இணையத்தில் தன்னை கேலி செய்வதாக கூறி சமூக வலைதளங்களிருந்து நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் வெளியேறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே நன்கு பரிச்சயமான காயத்ரி ரகுராம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பும் மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிக விமர்சனத்துக்குள்ளானார். மேலும் பாஜகவின் நிர்வாகியாக செயல்பட்டுவரும் காயத்ரி ரகுராம், காவிரி விவகாரம் மற்றும் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலையுண்ட சம்பவம் ஆகியவை குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருந்தார்.

இதையடுத்து ட்விட்டரில் தன்னை குறிவைத்து காங்கிரஸ் கட்சியினர் விமர்சிப்பதாக   கூறி தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் வெளியேறியுள்ளார்.

ட்விட்டர் மற்றும் சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம், “ என் வாழ்க்கை முழுவதும் மக்களுக்கு சேவை செய்ய நினைத்தேன். ஆனால் அரசியல் அதை செய்ய விடாது. நான் உண்மையை பேசி, மீடியா உள்பட அனைவரிடமும் உண்மையாக இருக்க விரும்பினேன். மக்கள் உண்மையை ஏற்க தயாராக இல்லை. நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன். தமிழகம் பாதுகாப்பான கரங்களில் உள்ளது என்று நம்புகிறேன். கடவுள் ஆசிர்வதிப்பாராக” என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்