• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கௌதம், சிவகார்த்திகேயன் படம் - உறுதி செய்த ப்ரீத்தா கணேஷ்

கௌதம், சிவகார்த்திகேயன் படம் - உறுதி செய்த ப்ரீத்தா கணேஷ்

கௌதம், சிவகார்த்திகேயன்

கௌதம், சிவகார்த்திகேயன்

கௌதம் சிவகார்த்திகேயனிடம் சொன்ன கதை பிடித்துப்போக இந்த கூட்டணி அமைந்துள்ளது.

  • Share this:
    கௌதம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படம் நடிக்கிறார், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது என்ற செய்தியை சில தினங்கள் முன்பு வெளியிட்டிருந்தோம். அதனை ப்ரீத்தா கணேஷ் உறுதி செய்துள்ளார்.

    கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ் மூன்று படங்கள் தயாரிக்கிறார். முதல் படம் ஜோஸ்வா இமை போல் காக்க படம் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இரண்டாவது படம் வெந்து தணிந்தது காடு சிம்பு நடிப்பில் தயாராகி வருகிறது. அதையடுத்து நதிகளிலே நீராடும் சூரியன் சிம்பு நடிப்பில் தொடங்கப்பட உள்ளது.

    இந்த மூன்று படங்கள் தவிர, சிவகார்த்திகேயன் நடிப்பில் கௌதம் இயக்கும் படத்தையும் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.



    இதனை அவரது மகளும் வேல்ஸ் குரூப் ஆஃப் இன்ஸ்டிட்யூட்டின் வைஸ் பிரசிடென்டுமான ப்ரீத்தா கணேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.



    கௌதம் சிவகார்த்திகேயனிடம் சொன்ன கதை பிடித்துப்போக இந்த கூட்டணி அமைந்துள்ளது. அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்கப்படலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: