வேட்டையாடு விளையாடு-2 குறித்து கமலுடன் பேச்சு -உறுதிசெய்த கவுதம் மேனன்

வேட்டையாடு விளையாடு-2 குறித்து கமலுடன் பேச்சு -உறுதிசெய்த கவுதம் மேனன்
கமல், கவுதம்
  • Share this:
வேட்டையாடு விளையாடு பாகம் 2 எடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது என்று இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கமல்ஹாசனின் திரை வரலாற்றில் மிக முக்கியமான போலீஸ் படமாக அந்தப் படம் அமைந்தது.

இந்தநிலையில், சமீபத்தில் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு கவுதம் மேனன் பேட்டியளித்திருந்தார். அதில், ‘வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறேன். கமலின் ஒரு ரசிகனாக வேட்டையாடு விளையாடு படத்தின் அறிமுகக் காட்சியை எழுதினேன். ரசிகர்கள் அதனை திரையில் கொண்டாடித் தீர்க்கவேண்டும் என்று எழுதப்பட்டது அந்தக் காட்சி. வேட்டையாடு விளையாடு-2ம் பாகத்திலும் அதுபோன்ற அறிமுகக் காட்சி உள்ளது. சூட்டிங்கிற்கு செல்வதற்கு நான் மிகுந்த ஆர்வமாக உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார். வேல்ஸ் இண்டர்நேஷ்னல் இந்தப் படத்தை தயாரிக்கும் என்று தெரிகிறது.


Also see:
First published: March 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading