Home /News /entertainment /

கவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய்சேதுபதி!

கவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய்சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியுடன் கவுதம் கார்த்திக் மற்றும் படக்குழு

நடிகர் விஜய் சேதுபதியுடன் கவுதம் கார்த்திக் மற்றும் படக்குழு

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தை நடிகர் விஜய் சேதுபதி துவங்கி வைத்துள்ளார்.

    இயக்குநர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக். இவர் நடிப்பில் சமீபத்தில் மிஸ்டர் சந்திரமௌலி என்ற படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக்குடன் அவரது தந்தை நடிகர் கார்த்திக் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படத்தை அடுத்து தற்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். தேவராட்டம் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்நிலையில் வொய்ட் லைன் புரொடக்‌ஷன் தயாரிக்கும் படத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் பொன்ராமிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அருண் சந்திரன் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதி இந்நிகழ்வை ரிப்பன் வெட்டித் துவங்கிவைத்தார். மேலும் இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக்குடன் நடிகர் சூரி இனைந்து நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தில் விஜய் சேதுபதியும் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor vijay sethupathi

    அடுத்த செய்தி