இருபால் ஈர்ப்பாளரா? விவாதத்தை ஏற்படுத்திய கேம் ஆப் ட்ரோன்ஸ் நடிகையின் பதிவு

சோஃபி டர்னர்

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ வெப் சீரிஸிலில் சான்சா ஸ்டார் என்னும் கதாபாத்திரத்தில் சோஃபி டர்னர் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் உலகம் முழுவதும் பிரபலமடைந்து அதன் மூலம் சோஃபி டர்னரும் புகழ் அடைந்தார். பின்னர். எக்ஸ் மென் அப்போகலிப்ஸ், எக்ஸ் மென் டார்க் பீனிக்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

  • Share this:
கேம் ஆப்  த்ரோன்ஸ் வெப் சீரிஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை சோஃபி டர்னரின் சமீபத்திய  இன்ஸ்டாகிராம் பதிவு மிகப்பெரிய விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மன்ஹட்டன் பகுதியில் உள்ள ஸ்டோன்வால் இன் எனப்படும் ஒருபால் ஈர்ப்பாளர்கள் கேளிக்கை விடுதியில் கடந்த 1969ம் ஆண்டு  போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போலீசார் வன்முறையிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து சக ஒருபால் ஈர்ப்பாளர்கள் மிகபெரிய அளவில் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தை நினைவு கூறும் விதமாகவும் ஒருபால் ஈர்ப்பாளர், இருபால் ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள், திருநம்பிகள் ஆகியோரை பெருமைப்படுத்தும் விதமாகவும் ஜூன் மாதத்தை பிரைட் மன்த் என எல்.ஜி.பி.டி.ஐ.க்யூ (LGBTIQ) சமூகத்தினர் கொண்டாட்டி வருகின்றனர்.

தற்போது, ஜூன் மாதம் பிறந்துள்ளதையடுத்து, இந்த  மாதத்தை வரவேற்பு பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதில் சோஃபி டர்னரின் பதிவு அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க.. அதிபர் ட்விட் நீக்கம்: ட்விட்டரையே தடை செய்த நாடு..

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ வெப் சீரிஸிலில் சான்சா ஸ்டார் என்னும் கதாபாத்திரத்தில் சோஃபி டர்னர் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் உலகம் முழுவதும் பிரபலமடைந்து அதன் மூலம் சோஃபி டர்னரும் புகழ் அடைந்தார். பின்னர். எக்ஸ் மென் அப்போகலிப்ஸ், எக்ஸ் மென் டார்க் பீனிக்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். தனது நீண்ட நாள் காதலன் ஜோ ஜோனஸை கடந்த  2019ம் ஆண்டு சோஃபி டர்னர் கரம் பிடித்தார்.  இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோஃபி டர்னர்  ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில்,  நேரம் என்பது நேராக இருப்பதில்லை,  நானும் அவ்வாறுதான், பிரைட் மன்த்,  இருபால் ஈர்ப்பாளர் பெருமை, ஒருபால் ஈர்ப்பாளர் பெருமை,  நகருங்கள், நான் ஒருபால் ஈர்ப்பாளர் போன்ற ஸ்டிக்கர்கள் இடம்பெற்றுள்ளன.

எனினும், தனது நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக அவர் எதையும் குறிப்பிடவில்லை. இந்நிலையில், சோஃபி டர்னர் இருபால் ஈர்ப்பாளரா இல்லையா என்ற விவாதத்தை அவரின் ரசிகர்கள் சமூக ஊடகத்தில் தொடங்கியுள்ளனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: