• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மூதாட்டிக்கு வீடு கட்டித்தரும் லாரன்ஸ் - நெஞ்சை உருக்கும் வீடியோ

மூதாட்டிக்கு வீடு கட்டித்தரும் லாரன்ஸ் - நெஞ்சை உருக்கும் வீடியோ

நடிகர் ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 வீடுகளை கட்டித் தருவேன் என்று அறிவித்த ராகவா லாரன்ஸ் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 வீடுகளை கட்டித் தருவேன் என்று அறிவித்த ராகவா லாரன்ஸ் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

    கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தப் புயல் சீற்றத்தால் ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன.

    புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர தமிழ் திரையுலகினரும் உதவிகளைச் செய்து வருகின்றனர்.

    புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 வீடுகளை கட்டித் தருவதாக கூறிய நடிகர் ராகவா லாரன்ஸ், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து கருத்து பதிவிட்டிருந்தார். அதில்,
    “கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன். எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்களது நல்ல உள்ளத்துக்கும் தலை வணங்குகிறேன்.



    ஒரு தனியார் தொலை காட்சியில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து விழுந்து நிர்கதியாய் ஒரு குடும்பம் பற்றி பார்த்தேன். வேதனை அடைந்து விட்டேன்.அந்த குடிசை வீடு அழகாக கட்டித்தர எவ்வளவு ஆகும். மிஞ்சி போனால் ஒரு லட்சம் ஆகும். அந்த வீடு மட்டுமில்லை . இது மாதிரி இடிந்து முற்றிலும் பாதிக்கப் பட்ட 50 வீடுகளை கட்டித் தர உள்ளேன். அப்படி பாதிக்கப் பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்.

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள். நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன். ஒரு தனியார் தொலைகாட்சியும் இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். அன்பு பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள். உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும்” என்று கூறியிருந்தார்.

    தற்போது பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து வீடுகளை கட்டித்தரும் பணியில் இறங்கியிருக்கும் லாரன்ஸ் குழுவினர் கூரை வீட்டை இழந்த ஒரு மூதாட்டியை கண்டறிந்துள்ளனர். அவர்களுடன் அந்த மூதாட்டி உரையாடும் வீடியோவை லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



    அந்த வீடியோவில் உங்களுக்கு என்ன வேண்டும் என்று மூதாட்டியிடம் குழுவினர் கேட்க, எனக்கு எதுவும் வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு `ஒரு குடிசை மட்டும் போதும்' என்று கூறுகிறார். இந்த வீடியோ பலரையும் நெஞ்சை உறையவைத்துள்ளது.

    இந்த மூதாட்டிக்கு தனது முதல்வீட்டை கட்டித் தருவதாக லாரன்ஸ் பதிவிட்டுள்ளார்.

    பிரசார மேடையில் சறுக்கி விழுந்த பா.ஜ.க. தலைவர் 'அமித்ஷா' - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: