நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான நடிகர் ஜி.வி.பிரகாஷ், சினிமா துறை மட்டுமின்றி சமூக பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். இசையில் ஹிட் அடித்ததைப் போல் நடிப்பிலும் தனக்கென தனி பாதை அமைத்து பயணித்து வருகிறார்.
திரைப்படம் தவிர சமூகப் பணிகளிலும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வரும் ஜி.வி.பிரகாஷ், ஜல்லிக்கட்டு போராட்டம், மீனவர்கள் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், நீட் எதிர்ப்பு போராட்டம், காவிரி போராட்டம், விவசாயிகள் போராட்டம் என, தமிழர்களின் பிரச்னைகளுக்காக சமூக வலைதளங்களிலும், களத்திலும் குரல் கொடுத்து வருகிறார். அவரின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.
அவரது சமூக நலப் பணிகளைப் பாராட்டி, கடந்த ஆண்டு மே மாதத்தில் புனித ஆண்ட்ரூஸ் இறையியல் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தியது.
தற்போது அவரது இசைப்பயணத்தைப் பாராட்டி சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், அப்பல்கலைக்கழகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது அவர் பெறும் இரண்டாவது கவுரவ டாக்டர் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காதலியை பார்க்க சென்ற பிரபல நடிகர், வீடு திரும்ப தாமதமானதால் விபரீதம் - வீடியோ
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.