Home /News /entertainment /

சூர்யா - வெற்றிமாறன் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யா - வெற்றிமாறன் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யா - வெற்றிமாறன் - ஜி.வி.பிரகாஷ்

சூர்யா - வெற்றிமாறன் - ஜி.வி.பிரகாஷ்

சூரரைப்போற்று படத்தைத் தொடர்ந்து சூர்யா - வெற்றிமாறன் இணையும் புதிய படத்துக்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அசுரன் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தையும் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளது.

இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இதுகுறித்து ட்வீட் செய்திருந்த படத்தின் தயாரிப்பாளர், "அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் 'சூர்யா 40' படத்தைத் தயாரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் இணைந்துள்ளார். இது அவருக்கு 75-வது படம். வடசென்னை தவிர்த்து அனைத்து படங்களிலும் வெற்றிமாறனுடன் பணியாற்றி ஹிட் பாடல்களைக் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திலும் இணைந்துள்ளார்.



அதேவேளையில் சூரரைப்போற்று படத்துக்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். விரைவில் அப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: விஜய் சேதுபதி பிறந்தநாளில் 'மாஸ்டர்' செகண்ட் லுக் - படக்குழு திட்டம்!
Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor Suriya, G.V.Prakash

அடுத்த செய்தி