• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஆரவ்,ஓவியா முத்தம் முதல் வனிதா விஜயக்குமார் வரை.. பிக்பாஸ் வீட்டின் டாப் சர்ச்சைகள்

ஆரவ்,ஓவியா முத்தம் முதல் வனிதா விஜயக்குமார் வரை.. பிக்பாஸ் வீட்டின் டாப் சர்ச்சைகள்

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக்பாஸ் சீசன் 1 முதல் பிக்பாஸ் சீசன் 4 வரை பிக்பாஸ் வீட்டில் நடைப்பெற்ற டாப் சர்ச்சைகள் இதோ..

  • Share this:
    பிக்பாஸ் தமிழ் 5வது சீசன் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ஷோவில், பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இருக்காது. இதுவரை நடந்து முடிந்த 4 சீசன்களில் எழுந்த டாப் சர்ச்சைகளின் லிஸ்டை இங்கே பார்க்கலாம்.

    ஆரவ் - ஓவியா மருத்துவ முத்தம்:

    பிக்பாஸ் ஷோவின் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்கு காரணம் ஓவியா என்றே கூறலாம். அவரின் நடத்தைகளால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள், ஓவியா ஆர்மி என்றே சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டனர். அந்த நேரத்தில் ஓவியா - ஆரவ் காதல் கதையும் பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக, ஓவியா - ஆரவ்வின் ’மருத்துவ முத்தம்’ கூட டிரெண்டிங்கில் இடம்பிடித்தது. இது குறித்து கமல் விசாரிக்கும்போது, ஓவியாவின் டென்ஷனைக் குறைக்க அப்படி செய்ததாக விளக்கம் கொடுத்தார்.

    ஓவியா வெளியேற்றம்:

    அந்த சீசனில் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், திடீரென ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். ஆரவ்வுடன் எழுந்த கருத்துவேறுபாட்டால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டனர். திடீரென விரக்தியின் உச்சத்துக்கே சென்ற அவர், பிக்பாஸ் வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர், மருத்துவ காரணங்களுக்காக அவர் ஷோவை விட்டு வெளியேறிதாக விளக்கம் கொடுக்கப்பட்டது.

    பரணியின் சர்ச்சை :

    பிக்பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக சென்ற பரணிக்கும், வீட்டில் இருந்த சக போட்டியாளர்களுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே முட்டல் மோதல்கள் எழுந்தன. கஞ்சா கருப்புக்கும், அவருக்கும் கடுமையான வார்த்தை மோதல்கள் எழுந்து, ஒரு கட்டத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற முயற்சி செய்தார். இது சர்ச்சையாக உருவெடுத்ததால், அவர் அந்த சீசனில் இருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது, பரணியை குறி வைத்து ஓரங்கட்டிய சக போட்டியாளர்களை பார்வையாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.



    மகத் - யாஷிகா காதல் சர்ச்சை:

    பிக்பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக சென்ற மகத்தும், யாஷிகாவும் காதலிக்கத் தொடங்கினர். யாஷிகாவும் மகத்தை காதலிப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இது மகத்தின் அப்போதைய காதலி பிராச்சி மிஸ்ராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத், யாஷிகாவுடனான காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் இப்போது குழந்தை பிறந்துள்ளது.

    ஐஸ்வர்யா - தாடி பாலாஜி:

    ஐஸ்வர்யா தத்தா, தாடி பாலாஜி மீது குப்பையை வீசியது சர்ச்சையாக உருவெடுத்தது. போட்டி ஒன்றில் தன்னுடைய பேச்சைக் கேட்கவில்லை என்பதற்காக கோபத்தின் உச்சத்துக்கு சென்ற ஐஸ்வர்யா, தாடி பாலாஜி மீது குப்பையை வீசினார். இது ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யாவை பிக்பாஸ் ரசிகர்கள் கடுமையாக வசைபாடினர்.

    also read : நீச்சல் குளம் பக்கத்தில் ஸ்டைலாக போஸ் கொடுத்த திருநங்கை நமிதா மாரிமுத்து..

    மதுமிதாவால் வெடித்த சர்ச்சை:

    பிக்பாஸ் சீசன் 3வது போட்டியாளரான மதுமிதாவுக்கும், சக போட்டியாளர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் வந்து கொண்டே இருந்தது. தமிழ் கலாச்சாரம் குறித்து அவர் மற்றவர்களுக்கு எடுத்த பாடம், வினையாக முடிந்தது. போட்டியாளர்கள் அவரை கார்னர் செய்ய ஆரம்பித்தனர். காவேரி தண்ணீர் பிரச்சனை குறித்து பிக்பாஸ் வீட்டில் பேசியது பெரிய சர்ச்சைக்கு வழிவகுத்தது. இதனால், கையை அறுத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் ஷோவில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.



    ஷெரின் - தர்ஷன் ரிலேஷன்ஷிப்:

    பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக இருந்த தர்ஷன் - ஷெரின் இடையே ரிலேஷன்ஷிப் குறித்து வனிதா தெரிவித்த கருத்து சர்ச்சையானது. அதாவது அவர்கள் இருவரும் காதலிப்பதாக, வனிதா கொளுத்திப்போட்டது மிகப்பெரிய சர்ச்சையாக உருவானது. இதனால், அப்செட்டான ஷெரின், வனிதாவுடன் மோதலில் ஈடுபட்டார்.

    also read : பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் இவர்கள் தான் - முழு பட்டியல்

    சரவணனின் வெளியேற்றம்:

    பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட சரவணன், பொதுப் பேருந்தில் செல்லும்போது பெண்களிடம் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்த கருத்து சர்ச்சையாக வெடித்தது. பொதுவெளியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால், போட்டியில் இருந்து சரவணன் பாதியில் வெளியேற்றப்பட்டார்.

    பிக்பாஸ் வீட்டில் போலீஸ்:

    வனிதா விஜயக்குமார் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது, அவருடைய முன்னாள் கணவர் வனிதா மீது காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். தன் குழந்தையை வனிதா சட்டவிரோதமாக அழைத்துச் சென்றதாக கொடுத்த புகாரில் காவல்துறையினர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றனர். அங்கு இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். இது அப்போது சர்ச்சையாக பேசப்பட்டது.



    சுரேஷ் சக்கரவர்த்தி - சனம் ஷெட்டி:

    பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட சுரேஷ் சக்கரவர்த்தி, டாஸ்க் ஒன்றில் சனம் ஷெட்டியை தாக்கிவிடுவார். இது குறித்து விளக்கம் கொடுத்த சுரேஷ் சக்கரவர்த்தி, உள்நோக்கத்துடன் சனத்தை தாக்கவில்லை எனக் கூறினார். அதேநேரத்தில், சுரேஷ் சக்கரவர்த்தியில் நடத்தை அவமானகரமானது என ஷனம் சாடினார். பின்னர், இந்த விஷயம் குறித்து கண்ணீர்விட்டு அழுத சுரேஷ் சக்கரவர்த்தி, தன்னை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

    also read : நம்ப முடியுதா? பிக் பாஸ் ஐக்கி பெர்ரி விவசாய குடும்பத்தை சேர்ந்தவங்களாம்!

    பாலாஜி முருகதாஸ் - சனம்ஷெட்டி:

    ’மிஸ்டர் இந்தியா’ போட்டியில் வெற்றிப்பெற்ற பாலாஜி முருகதாஸ், மிஸ் சவுத் இந்தியா போட்டியில் ஷனம் ஷெட்டி வெற்றிப் பெற்றது குறித்து தரக்குறைவாக பேசினார். தன் டைட்டிலுடன் ஒப்பிடும்போது, ஷனம் ஷெட்டியின் டைட்டில் டுபாக்கூர் என கூறியது, இருவருக்கும் இடையே கடும் மோதலை ஏற்படுத்தியது.

    ஆரி அர்ஜூன் - பாலாஜி மோதல் :

    பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜூன், பாலாஜி முருகதாஸை சோம்பேறி எனக் கூறியது இருவருக்கும் இடையே அடிதடி அளவுக்கு சென்றது. கோபத்தில் இருந்த பாலாஜி, fool’, ‘idiot’ என பதிலுக்கு திட்டினார். இவர்களுக்கு இடையே ஏற்படும் மோதலை தீர்த்துவைப்பதே, வார இறுதியில் கமலுக்கு பெரும் பஞ்சாயத்தாக இருக்கும்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: