கலர்ஸ் தமிழை மேலும் வண்ணமாக்க வருகிறாள் மைனா...

கலர்ஸ் தமிழை மேலும் வண்ணமாக்க வருகிறாள் மைனா...

மைனா நெடுந்தொடர்

இந்த தொடர் முற்றிலும் தைரியம், தன்னம்பிக்கை , சம உரிமை போன்ற உணர்வுகளுடன் நியாயத்தை நோக்கியப் பயணமாக இருக்கும் .

  • News18
  • Last Updated :
  • Share this:
கலர்ஸ் தமிழ் தன்னிகரற்ற தொடர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளிலும் ஒரு அங்கமாக உள்ளது. அந்த வகையில் இன்னும் உங்களை மகிழ்ச்சிபடுத்த மைனா என்னும் குட்டி தேவதையை உங்கள் இல்லங்களில் விளையாட வைக்க முடிவு செய்துள்ளது.ஏழு வயதான இந்த மைனா மகிழ்ச்சியாக கிராமத்தில் அம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்தவள். ஊருக்கே சுட்டிப் பெண். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பாள். சிறு பெண்ணாக இருந்தாலும் அவளின் தைரியம், தன்னம்பிக்கை பெரியவர்களையே விஞ்சியது. என்னதான் மகிழ்ச்சியான குடும்பமாக இருந்தாலும் பணமின்மையும் வறுமையும் அவர்களை நிம்மதியாக வாழ விடவில்லை.

இதனால் தன் அன்பு மகளைத் தாயே குழந்தைத் தொழிலாளராக அனுப்பி வைக்கிறார். அங்கோ அரக்க குணம் படைத்த முதலாளி சிங்கப் பெருமாள். தன் அரசியல் பலம் ,பண பலத்தால் மொத்த ஊரையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவன். அவர்களிடம் அடிமையாக சிக்கித் தவிக்கும் சிறுவர்கள் என முற்றிலும் போராட்ட வாழ்க்கையாக இருக்கிறது. இந்த இடத்தில்தான் வீர மங்கையான மைனா அடிமைத் தனத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் கேள்வி கேட்கத் துவங்குகிறாள்.இப்படி ஒரு ஊரையே ஆட்டி வைக்கும் முதலாளியை யானைக் காதுக்குள் புகுந்த எறும்பு போல் சிறுமி மைனா தன் கேள்விகளாலும், தந்திரத்தாலும் எவ்வாறு எதிர் கொள்கிறாள் என்பதுதான் இந்த நெடுந்தொடர்.இந்த காலத்திலும் இந்தக் கதைக் கரு சாத்தியமாகிறதெனில்  இன்னும் கிராமங்களில் இந்த நிலை நீடிப்பதேக் காரணம் . இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் வறுமையில் வாடும், விவசாயத்தை இழந்த மக்கள் தங்கள் குழந்தைகளையும் வேலைக்கு அனுப்புகின்றனர் என்பதே உண்மை. ” மைனா தொடர் ஒற்றைப் பெண்ணின் குரல் மட்டுமல்ல ஒட்டுமொத்தக் குழந்தைத் தொழிலாளர்களின் அவல நிலையை எடுத்துரைக்கும். இது குழந்தைத் தொழிலாளர் முறையை உடைக்கும். இந்த தொடர் முற்றிலும் தைரியம், தன்னம்பிக்கை , சம உரிமை போன்ற உணர்வுகளுடன் நியாயத்தை நோக்கியப் பயணமாக இருக்கும் . மற்றவர்களுக்கும் சிறந்த ஊக்குவிப்பாக இருக்கும் என நம்புகிறோம் “ என மைனாவின் இயக்குநர் நித்யானந்தன் கூறுகிறார்.மைனா மற்றும் முதலாளி சிங்கப் பெருமாளுடன் மற்ற முன்னணி நடிகர் , நடிகைகளும் இதில் நடிக்கவுள்ளனர். வரும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு மைனா என்னும் புத்தம் புது தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

தொடரின் முன்னோட்டம் உங்களுக்காக...

Published by:Sivaranjani E
First published: