Home /News /entertainment /

தீபிகா படுகோன் முதல் ஆலியா பட் வரை பொது இடத்தில் கண்கலங்கிய பிரபலங்கள்!

தீபிகா படுகோன் முதல் ஆலியா பட் வரை பொது இடத்தில் கண்கலங்கிய பிரபலங்கள்!

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

இதுவரை பாலிவுட்டில் பொது இடத்தில் கண்கலங்கிய முக்கியமான சில பிரபலங்களின் வீடியோக்களை பார்க்கலாம்.

  சல்மான் கான் (Salman Khan):

  1988ஆம் ஆண்டு வெளியான 'பீவி ஹோ தோ ஐசி' என்ற திரைப்படத்தில் அறிமுகமான சல்மான் கான் (Salman Khan) , மிகப் பெரிய வெற்றி பெற்ற மைனே பியார் கியா (1989) மூலம் இந்தி திரைப்படத்துறையில் களமிறங்கினார். அத்திரைப்படத்தில் அவரின் நடிப்பிற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் அவர் வென்றார். சாஜன் (1991), ஹம் ஆப்கே ஹே கோன் (1994), பீவி நம்பர் 1 (1999) போன்ற பாலிவுட்டின் மிகப் பெரிய வெற்றி படங்களும் அவரை இந்திய திரைப்படத்துறையில் நிலைநிறுத்தி உள்ளன.

  சல்மான் கான் (Salman Khan) சமீபத்தில் பிக் பாஸ் 14ன் (Bigg Boss 14) எபிசோடில் இருந்து ஜாஸ்மின் பாசினை (Jasmin Bhasin) நிகழ்ச்சியிலிருந்து எவிக்ட் செய்வதாக அறிவித்தார்.  அப்போது அலி கோனி (Aly Goni) மற்றும் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் மட்டும் அழவில்லை, பிக் பாஸ் ஹோஸ்ட் சல்மான் கானும் கூட அழுதுவிட்டார். ஜாஸ்மின் பெயரை சல்மான் அறிவித்ததும், ஜாஸ்மினுடன் தன்னையும் அழைத்துச் செல்லுமாறு கெஞ்சிய அலியின் ரிஆக்சனை பார்த்தபோது பிக் பாஸ் ஹோஸ்ட்டான சல்மானும் கண் கலங்கினார்.  அமிதாப் பச்சன் (Amitabh Bachchan):

  சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞரான ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்களின் மகனும், இந்தித் திரையுலகில் நான்கு தசாப்தங்களாக தனது பங்களிப்பை அளித்து, ‘சூப்பர் ஸ்டார்’ என்று போற்றப்படுபவர், அமிதாப் பச்சன் அவர்கள். இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில், முதல் இடத்தைத் தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் பிடித்திருப்பவரும் இவரே. அனைவராலும் அன்போடு அழைக்கப்படும்  அமிதாப் பச்சன் (Amitabh Bachchan) 2018ம் ஆண்டு நடந்த கவுன் பனேகா குரோர்பதி (Kaun Banega Crorepati) நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு அழுவதை பலரும் கண்டனர். ரியாலிட்டி குவிஸ் (quiz) நிகழ்ச்சியின் ஹோஸ்ட் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது தாயார் தேஜி பச்சனின் (Teji Bachchan) குரலை எதிர்பாராமல் மேடையில் கேட்டதால் ஆச்சரியத்தில் கண்கலங்கினார்.  தீபிகா படுகோன் (Deepika Padukone):

  பெங்களூரில் வளர்ந்த தீபிகா, க‌ல்லூரியில் ப‌டிக்கும் பொழுது Department of Cosmetic Industryயில் சேர்ந்தார். 2006ம் ஆண்டில் முத‌ன் முறையாக "ஐஸ்வர்யா" என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார். 2007-ல் ஃபாரா கானின் "ஓம் ஷாந்தி ஓம்" இந்தி ப‌ட‌த்தின் மூலம் இந்தியா முழுவ‌தும் அறிமுகமானார். 2020 ஜனவரியில் தனது சபாக் (Chhapaak) திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டில், முதல் முறையாக முழுமையான ட்ரெய்லரைப் பார்த்த பிறகு தீபிகா கண் கலங்கினார். ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவரின் பயணத்தைதான் இந்த திரைப்படம் கதையாக கொண்டுள்ளது இதில் தீபிகா முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறார், தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு சரியான நீதியை வழங்கிடவும் தாக்குதல் நடத்தியவர்களை தண்டிக்கவும் விரும்பும் ஒரு பெண்னை பற்றிய உண்மை கதைதான் இது.   

  ஆலியா பட் (Alia Bhatt):

  உறவுகளில் அதிகம் பேசப்படாதது அக்கா-தங்கை உறவு. அவர்களுக்குள் பகிர்தல் குறைவாக இருந்தாலும் அன்பு ஆழமானது. அந்த வரிசையில் சமீபத்தில், நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பாலிவுட் நட்சத்திரம் ஆலியா பட், தன் அக்காவைப் பற்றிப் பேசியபோது மனம் உடைந்து மேடையிலேயே அழுதிருக்கிறார். இதற்கான காரணம் ஆலியாவை மட்டுமல்ல இந்திய மக்களையும் நெகிழவைத்துள்ளது. 2019 ஆம் ஆண்டு We The Women Asia summitல் மன ஆரோக்கியம் குறித்து பேசிய ஆலியா, தனது சகோதரி ஷாஹீன் பட்டின் (Shaheen Bhatt)  மனச்சோர்வை பற்றி பேசும்போது சபையிலே அழுதுவிட்டார். ஆலியா அவருடைய சகோதரி ஷாஹீனோடு கலந்துகொண்ட அந்த நிகழ்வில், தன்னுடைய சகோதரி சிறு வயதிலேயே மனதளவில் ஏராளமான துன்பங்களை அனுபவித்ததைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். எப்போதும் இருவரும் இணைந்திருந்தும், தன்னுடைய அக்கா மன அழுத்தத்தினால் போராடுகிறார் என்பதை ஒரு நாளும் உணரவில்லையே என்று மனமுடைந்து அழுதார். தற்போது மனநல ஆலோசகராக இருக்கும் ஷாஹீன் தன் வாழ்க்கையில் அனுபவித்த மனஅழுத்தத்தின் வலிகளைப் பற்றி சமீபத்தில் வெளியான "I’ve never been Unhappier" எனும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

      
  View this post on Instagram

   

  A post shared by Manav Manglani (@manav.manglani)

  நீலம் கோத்தாரி (Neelam Kothari):

  நீலம் கோத்தாரி ஒரு குஜராத்தி - ஈரானிய பெற்றோருக்கு மகளாக ஹாங்காங்கில் பிறந்தார். குழந்தையாக இருந்தபோது, அவர் கீபோர்ட் வாசிக்க கற்றுக்கொண்டார். இவர் ஜாஸ் பாலே நடனம் ஆடுவதிலும் வல்லவர். Bollywood Wivesன் ஃபேபுலஸ் லைவ்ஸ் Netflix நிகழ்ச்சியில் நடிகை சில முறை அழுவதை நம்மில் பலர் பார்த்திருப்போம். இறுதி எபிசோடில், ஷாருக் கான் (Shah Rukh Khan) மற்றும் அவரது மனைவி கவுரி (Gauri) ஆகியோருடனான தனது உறவைப் பற்றி நீலம் பேசுகிறார். நீலம் அதைப் பற்றி விரிவாக பேசும்போது, கேமரா முன் அழுது விட்டார்.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Alia Bhatt, Amithab bachchan, Bollywood, Deepika Padukone, Salman khan

  அடுத்த செய்தி