நடிகர் சூரி அளித்த நில மோசடி புகார்... முன்ஜாமின் கோரி முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மனு...!

போலீசார் தங்களை கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் சூரி அளித்த நில மோசடி புகார்... முன்ஜாமின் கோரி முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மனு...!
சூரி | ரமேஷ் குட்வாலா உடன் விஷ்ணு விஷால்
  • News18
  • Last Updated: October 23, 2020, 5:09 PM IST
  • Share this:
நடிகர் சூரி அளித்துள்ள நிலமோசடி புகாரில், முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ள வீரதீர சூரன் என்ற திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி நடித்துள்ளார். இதற்காக வழங்க வேண்டிய ரூ.40 லட்சம் ஊதியத்துக்கு பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தை தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன், விஷ்ணு விஷால்
தந்தையும், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா கூறியுள்ளனர்.


அந்த நிலத்துக்காக இவர்கள் இருவரும் தன்னிடம் இருந்து ரூ.2.70 கோடியை கூடுதலாக பெற்று மோசடி செய்து விட்டதாக போலீசில் நடிகர் சூரி புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.Also read... Bigg boss 4 Tamil | கோபப்படாமல் இருக்க முடியாது... சக போட்டியாளர்களால் ஆவேசமடைந்த பாலாஜி!

இந்தநிலையில், போலீசார் தங்களை கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்செய்துள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.
First published: October 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading