Home /News /entertainment /

2019-ம் ஆண்டின் போர்ப்ஸ் டாப் 100 செலிப்ரிட்டி பட்டியல் - கோலி முதலிடம்

2019-ம் ஆண்டின் போர்ப்ஸ் டாப் 100 செலிப்ரிட்டி பட்டியல் - கோலி முதலிடம்

News18

News18

Forbes 2019 Top Celebrity List |

  • News18
  • Last Updated :
    2019-ம் ஆண்டுக்கான போர்ப்ஸ் டாப் 100 செலிப்ரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

    2019ம் வருடத்திற்கான போர்ப்ஸ் இந்தியா இதழின் டாப் 100 செலிப்ரிட்டிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஈட்டப்பட்ட வருவாய் மற்றும் அவர்களின் புகழ் அளவை மையமாக வைத்து இந்த தரவரிசையை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது

    இந்த பட்டியலில் முதலிடத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளார். இவர் 2019ம் ஆண்டில் 252 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் அக்‌ஷய் குமாரும், மூன்றாவது இடத்தில் சல்மான் கானும் உள்ளனர்.



    நான்காவது இடத்தில் அமிதாப் பச்சன், ஐந்தாவது இடத்தில் தோனி உள்ளனர்.  6-ம் இடத்தில் நடிகர் ஷாருக்கான் இடம்பெற்றுள்ளார்.



    ஏழாம் இடத்தில் நடிகர் ரன்வீர் சிங், எட்டாம் இடத்தில் நடிகை ஆலியா பட், 9-ம் இடத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் இடம்பெற்றுள்ளனர்.



    அதிகமாக பாலிவுட் நடிகர்களையும், கிரிக்கெட் வீரர்களையும் கொண்டுள்ள இந்த பட்டியலில் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்களும் இடம்பிடித்துள்ளனர்

    நடிகர் ரஜினிகாந்த் 13வது இடத்தை பிடித்துள்ளார். இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் 16வது இடத்தையும், நடிகர் விஜய் 47வது இடத்தையும் பிடித்துள்ளார். நடிகர் அஜித் 52வது இடத்தையும், தனுஷ் 64வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    அதேபோல், இயக்குநர் ஷங்கர், சிவா, கார்த்திக் சுப்பாராஜ் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    முழு பட்டியலை பார்க்க இங்கே கிளிக் செய்ய... 

     
    Published by:Sankar
    First published:

    Tags: Forbes India, YearEnder 2019

    அடுத்த செய்தி