• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தமிழ் தெரிந்தவர்களுக்கு மாதம் ரூ.70 ஆயிரம் ஊதியம் வரை வேலைவாய்ப்பு - மதன் கார்க்கி

தமிழ் தெரிந்தவர்களுக்கு மாதம் ரூ.70 ஆயிரம் ஊதியம் வரை வேலைவாய்ப்பு - மதன் கார்க்கி

  • Share this:
    தமிழ்மொழி தெரிந்தவர்களுக்கு மாதம் 70 ஆயிரம் ஊதியத்துடன் வேலைவாய்ப்பு உருவாகி வருவதாக திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

    நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், பேஸ்புக், அமேசான், கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்களில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து வேலைக்கு அமர்த்தி வருவதாக கூறினார்.

    சமீபத்தில், இயக்குநர் ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தில் காளகேயர்கள் பேசும் கிளிக்கி மொழியை அறிமுகம் செய்யப்பட்டது.  படத்திற்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்டது கிளிக்கி மொழியாகும். அந்த மொழியை உலக தாய்மொழிதினத்தன்று இயக்குநர் ராஜமௌலி அறிமுகம் செய்தார்.

    கிளிக்கி மொழிக்காக மதன் கார்க்கி வடிவமைத்த எழுத்துக்கள் மற்றும் எண்களை கற்றுக்கொள்ள கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் லைஃபோ நிறுவனத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய தளத்தை இயக்குநர் SS ராஜமௌலி வெளியிட்டார். கற்பதற்கு உலகின் மிக எளிமையான மொழி என்ற அடைமொழியோடு கிளிக்கியின் தளம் வெளியிடப்படுகிறது என்று கூறப்பட்டது.

     

    Also see...நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது தனக்கும் நடந்ததாக  வாரிசு நடிகை பரபரப்பு பேட்டி

     

    பாசமுள்ள மனிதனப்பா, மீசை வச்ச குழந்தையப்பா...! குழந்தையை கொஞ்சும் ரஜினி!

     

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: