நடிகர் விவேக் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் பலர் இரங்கல்...!

நடிகர் விவேக்

விவேக்கின் மரணம் குறித்து பார்த்திபன், ராதிகா, தேவி ஸ்ரீ பிரசாத், சுனைனா உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  நகைச்சுவை நடிகர் விவேக் உயிரிழந்ததை தொடர்ந்து திரைப் பிரபலங்கள் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீர் என மயங்கி விழுந்ததால், சென்னை வடபழனியிலுள்ள சிம்ஸ் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக திரைப் பிரபலங்கள் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  நடிகை ராதிகா சரத்குமார் விவேக் குறித்த தனது இரங்கல் பதிவில், விவேக்கின் மரண செய்தியை கேட்டு வார்த்தைகளற்று போனது. விவேக் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட பல அற்புதமான நினைவுகள் மற்றும் தருணங்கள் எனது நினைவில் விரைந்து கொண்டே செல்கின்றன.  மேலும் என் இதயம் உங்கள் குடும்பத்தினரிடம் செல்கிறது, உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் அன்பு நண்பரே என்றும் தனது ட்விட்டர் பதிவில் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

  விவேக்கின் மரணம் குறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள இயக்குனரும் நடிகருமான பார்த்திபன், சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு, வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர் என்று தெரிவித்துள்ளார்.  மேலும், விவேக் குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஒரு சமூக செய்தியை எப்போதும் தனது காமெடியில் இணைத்த எங்கள் காலத்தின் சிறந்த நகைச்சுவை நடிகர் விவேக். நான் எப்போதும் அவரது டைஹார்ட் ரசிகன். விவேக் நீங்கள் எங்கள் இதயங்களில் என்றென்றும் வாழ்வீர்கள் என்றும் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  விவேக் குறித்து நடிகை சுனைனா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், விவேக் குடும்பத்தினருக்கும், அன்பானவர்களுக்கும், ரசிகர்களுக்கும், எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.  அவர் எப்போதும் எங்களை சிரிக்க வைத்தார், ஆனால் இன்று எங்கள் புன்னகைகள் அனைத்தையும் அவருடன் எடுத்துச் சென்றார். இது ஒரு சகாப்தத்தின் முடிவு என்றும் தெரிவித்துள்ளார்.

  தொடர்ந்து விவேக்கின் மரணம் குறித்து தனது ட்விட்டரில் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, மாபெரும் கலைஞனே மனம் உடந்து போனேன்... பெரிய இழப்பு... என்ன நடக்கிறது??? ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.  நடிகை கஸ்தூரி விவேக் குறித்த இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது, விவேக் சார் இல்லை என்பதை ஜீரணிக்க முடியாது. இது நம் அனைவருக்கும் இருண்ட நாள்.  நான் ஒரு மதிப்புமிக்க நண்பனை இழந்துவிட்டேன். தமிழ் சினிமாவிற்கு பிடித்த மகனை இழந்துள்ளது. நாடு ஒரு அற்புதமான முன்மாதிரியை இழந்துள்ளது. ஓம் சாந்தி விவேக் என்று தெரிவித்துள்ளார்.

  விவேக் குறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள நடிகர் கௌதம் கார்த்திக், இதை நம்ப முடியவில்லை... அவர் நம்மை சிரிக்க வைத்தார், அவர் தனது நடிப்பின் மூலம் எங்களுக்குக் கல்வி கற்பித்தார்.  இந்த உலகத்தை கவனித்து, அதை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பதைக் கற்பிக்க உதவினார். உங்களைப் போல இன்னொருவர் இருக்க மாட்டார். நாங்கள் உங்களை இழந்து வாடுகிறேம் என்றும் தெரிவித்துள்ளார்.
  Published by:Vinothini Aandisamy
  First published: