• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங்கில் காத்து வாக்குல ரெண்டு காதல் ஃப்ர்ஸ்ட் சிங்கிள்

ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங்கில் காத்து வாக்குல ரெண்டு காதல் ஃப்ர்ஸ்ட் சிங்கிள்

காத்துவாக்குல ரெண்டு காதல்

காத்துவாக்குல ரெண்டு காதல்

விக்னேஷ் சிவன் இயக்கும் ‘’காத்துவாக்குல ரெண்டு காதல்’’ படத்தின் ‘ரெண்டு காதல்’ என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • Share this:
    தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு பின்னர் ‘பாவகதைகள்’ என்ற ஆந்தாலஜியில் பணியாற்றிய விக்னேஷ், தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். அவருடன் சமந்தா, நயன்தாரா ஆகிய இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். நானும் ரவுடிதான் படத்துக்குப் பின்னர் விக்னேஷ் சிவன் - விஜய் சேதுபதி - நயன்தாரா இணையும் இரண்டாவது படமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது.

    செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பாக லலித்குமார், ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை 2020-ம் ஆண்டின் காதலர் தினத்தன்று படக்குழு வெளியிட்டது.

    விக்னேஷ் சிவன் சிம்பு, வரலட்சுமி நடிப்பில் உருவான போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. காமெடி நிறைந்த இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, RJபாலாஜி என பலர் நடிந்திருந்தனர்.

    தற்போது இதே கூட்டணியை வைத்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார் . இதில் நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி நடிக்கின்றனர். இந்த படமும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

     



     

    மேலும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைப்பெற்றது. இந்த படத்திற்கு அனிருத்இசையமைத்துள்ளார். இதனிடையே இந்த ஆண்டு காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ' காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ரெண்டு காதல்’ என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    முன்னதாக இந்த திரைப்படத்தின் அப்டேட்டை காதலர் தினத்தன்று அறிவிக்கவிருப்பதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

     



     

    இதனிடையே அனிருத் இசையில், விஜய் சேதுபதி நடிப்பில் ரெண்டு காதல் என வெளியாகியுள்ளது . இந்த பாடல் யூடியூபில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகின்றது. இதுவரை இந்த பாடலை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: