• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஸ்ருதி ஹரிஹரன் கொடுத்த பாலியல் புகாரில் நடிகர் அர்ஜூன் மீது வழக்குப்பதிவு!

ஸ்ருதி ஹரிஹரன் கொடுத்த பாலியல் புகாரில் நடிகர் அர்ஜூன் மீது வழக்குப்பதிவு!

ஸ்ருதி ஹரிஹரன்

ஸ்ருதி ஹரிஹரன்

நடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த மீ டு பாலியல் புகாரின் அடிப்படையில் நடிகர் அர்ஜூன் மீது 3 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த மீடூ பாலியல் புகாரின் அடிப்படையில் அவர் மீது 3 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தமிழில் வெளியான நிபுணன் என்ற திரைப்படம் கன்னடத்தில் விஸ்மயா என்ற பெயரில் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜூன் மனைவியாக ஸ்ருதி ஹரிஹரண் நடித்திருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது, அர்ஜூன் தன்னைக் கட்டி அணைத்து அத்துமீறியதாக ஸ்ருதி குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் சமரசத் தீர்வு காண இருவரும் மறுத்த நிலையில், 5 கோடி ரூபாய் கேட்டு ஸ்ருதி மீது அர்ஜூன் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

    அதே சமயத்தில் அர்ஜூனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா, பணம் பறிக்கும் முயற்சியில் ஸ்ருதிஹரிஹரன் பாலியல் புகார் சொல்கிறார் என்று கண்டித்தார். கன்னட திரைப்பட வர்த்தக சபை அர்ஜுனையும் , ஸ்ருதி ஹரிஹரனையும் சந்திக்க வைத்து சமரச முயற்சியில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தது.

    இந்நிலையில், பெங்களூருவில் உள்ள கப்பன் பூங்கா காவல்நிலையத்தில் ஸ்ருதி அளித்த புகாரின்பேரில் அர்ஜூன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் அர்ஜீன் மிது 354 ஏ, 509,506, 354 ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: