கொரோனா பாதிப்பு: உலகின் மிகச் சிறந்த சினிமா இயக்குநர் கிம் கி டக் மரணம்

கொரோனா பாதிப்பு: உலகின் மிகச் சிறந்த சினிமா இயக்குநர் கிம் கி டக் மரணம்

கிம் கி டக்

உலகின் மிகச் சிறந்த திரைப்பட இயக்குநராக அறியப்படும் தென்கொரியாவைச் சேர்ந்த கிம் கி டக் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 59.

 • Share this:
  தென்கொரியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் கிம் கி டக். 1960-ம் ஆண்டு பிறந்த அவர், 1996-ம் ஆண்டு க்ரோகடைல் என்ற படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமானார். அவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் நாடு எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் சென்றடைந்தது. அவருடைய படங்களில் சமாரிட்டம் கேர்ள், 3 அயர்ன், அரிரேங், பியிடா, ஒன் ஆன் ஒன் ஆகிய படங்கள் சினிமா ரசிகர்களால் எப்போதும் கொண்டாடப்படும் படமாக இருந்துவருகிறது. தென் கொரிய இயக்குநர்களிலேயே கிம் கி டக் மட்டும்தான், உலகின் மிகப் பெரிய விருதுகளான கேன்ஸ், வெனிஸ், பெர்லின் திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.

  2000-ம் ஆண்டு கிம் இயக்கிய த இஸ்லே படம் 2001-ம் ஆண்டு டோரென்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது, கிம் படங்கள் உலக அளவில் கவனத்தை ஈர்க்கத் தொடங்கின. 2017-ம் ஆண்டு கிம் மீது அவருடைய படத்தில் நடித்த நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். அது மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், கடந்த மாதம் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லட்வியாவுக்குச் சென்றார். அங்கே சென்ற அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

  அதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடைய மறைவை அவரது குடும்பத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர் என்று தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: