ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளி மரணம் - இயக்குநர் மிஷ்கின் கண்ணீர் மல்க அஞ்சலி

தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளி மரணம் - இயக்குநர் மிஷ்கின் கண்ணீர் மல்க அஞ்சலி

இயக்குநர் அருண் மொழி

இயக்குநர் அருண் மொழி

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  நடிகர், திரைப்பட எழுத்தாளர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்ட அருண் மொழி காலமானார். அவருக்கு வயது 50.

  தமிழ் குறும்பட வரலாற்றில் முக்கிய ஆளுமையாக விளங்கிய அருண் மொழி புனேயில் உள்ள திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்கம் படித்தவர். பின்னர் ருத்ரையாவின் அவள் அப்படித்தான் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். 1989-ம் ஆண்டு நாசரை நாயகனாக வைத்து ஏர்முனை படத்தை இயக்கினார்.

  திரைத்துறை தாண்டி இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்ட அருண்மொழி இலக்கிய ஆளுமைகள் குறித்த ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஸ்தானிஸ்லாவிஸ்கி என்ற நடிப்புப் பள்ளியைத் தொடங்கிய அருண்மொழி, நடிப்புக் கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு எளிய கட்டணத்துடன் பயிற்சி வழங்கினார்.

  நிலமோசடி, இசைவானில் இன்னொன்று, திருநங்கைகள் உள்ளிட்ட பல ஆவணப்படங்களை இயக்கிய அருண்மொழி, சென்னையில் நடக்கும் ஜப்பானிய திரைப்பட விழாவில் கலந்து கொண்டபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.

  அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் மிஷ்கின், அருண்மொழியுடனான நினைவுகளைப் பகிர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Mysskin