திருநங்கை மேக்கப் ஆர்ட்டிஸ்டுக்கு பாலியல் தொல்லை - பிரபல நடிகையின் மகன் மீது புகார்
திருநங்கை மேக்கப் ஆர்ட்டிஸ்டுக்கு முகநூலில் பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல நடிகையின் மகன் மீது பகீர் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமா வினீத் | மகனுடன் நடிகை மாலா பார்வதி
- News18 Tamil
- Last Updated: June 13, 2020, 1:08 PM IST
மலையாள திரை உலகைச் சேர்ந்த மாலா பார்வதி, தமிழில் நிமிர், கேம் ஓவர் படங்களில் நடித்துள்ளார். மாலா பார்வதியின் மகன் மீது, மலையாள ஒப்பனைக் கலைஞரும் திருநங்கையுமான சீமா வினீத் பகீர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்
பிரபல நடிகை ஒருவரைக் கடத்தி பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அதையடுத்து தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
மாலா பார்வதியின் மகனான அனந்த கிருஷ்ணன் முகநூல் மூலம் தனக்கு வெளிப்படையாக நிர்வாண புகைப்படங்களையும், குறுஞ்செய்திகளையும் அனுப்பி பாலியல் அழைப்பு விடுத்ததாக சீமா வினீத் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து விரிவான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சீமா, என்ன நடந்தது என விரிவாக விளக்கியுள்ளார் திரையுலகில் ஆண்களின் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் மாலா பார்வதியின் மகனிடமிருந்து வந்திருந்ததால்தான் அதிர்ச்சி அடைந்ததாக சீமா கூறியுள்ளார். மாலா பார்வதியிடம் தான் புகார் அளித்தபோது, தன்னிடம் பார்வதி மன்னிப்பு கேட்டதாகவும், இது மன்னிப்பு கேட்பதன் மூலம் தீர்க்கப்பட வேண்டிய விஷயமில்லை என்று தான் கூறியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என நடிகை மாலா பார்வதி தன்னிடம் கூறி இருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இந்த விவகாரத்தை மறைக்க தன்னிடம் பண பேரம் நடைபெற்றதாகவும், பணத்துக்காக தன்னுடைய தன்மானத்தை இழக்கத் தயாராக இல்லை எனவும் சீமா கூறியுள்ளார். சீமாவின் முகநூல் பதிவைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் முகநூலில் பலர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்
இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை மாலா பார்வதி, ’ஒரு தாய் மற்றும் ஒரு பெண்ணாக இதை பார்த்தவுடன் தான் சீமாவிடம் மன்னிப்பு கேட்டதாக கூறியுள்ளார். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கச் சொன்னதாகவும், தான் இந்த விவகாரத்தில் தலையிடப்போவதில்லை என தெரிவித்துவிட்டதாகவும்’ மாலா பார்வதி தெரிவித்துள்ளார்முகநூலில் சீமா தெரிவித்த புகாரால் மலையாள திரை உலகில் மீண்டும் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
மேலும் படிக்க: ஏ.ஆர்.ரஹ்மான் இசையை நான் முதலில் உணரவில்லை... கமல் கலந்துரையாடலின் ஹைலைட்ஸ்!
பிரபல நடிகை ஒருவரைக் கடத்தி பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அதையடுத்து தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
மாலா பார்வதியின் மகனான அனந்த கிருஷ்ணன் முகநூல் மூலம் தனக்கு வெளிப்படையாக நிர்வாண புகைப்படங்களையும், குறுஞ்செய்திகளையும் அனுப்பி பாலியல் அழைப்பு விடுத்ததாக சீமா வினீத் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து விரிவான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சீமா, என்ன நடந்தது என விரிவாக விளக்கியுள்ளார்