Home /News /entertainment /

வான்வெளியில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த முதல் இந்திய திரைப்படம் ‘பைட்டர்’..

வான்வெளியில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த முதல் இந்திய திரைப்படம் ‘பைட்டர்’..

‘பைட்டர்’.திரைப்படம்

‘பைட்டர்’.திரைப்படம்

வான்வெளியில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த முதல் இந்திய திரைப்படம் ‘பைட்டர்’. இந்த படத்தை மார்ப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வையாகாம்18 ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

  உலக சினிமா இந்தியன் சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் பாலிவுட்டில் தற்போது ஒரு ஆக்‌ஷன் திரைப்படம் உருவாக உள்ளது.

  கடந்த 10 வருடங்களில் வையாகாம்18 ஸ்டுடியோஸ் நாடகக் கதைகளில் இருந்து த்ரில்லர் படங்களையும், வழக்கமான வாழ்க்கை கதைகளில் இருந்து வித்தியாசமான காதல் கதைகள் கொண்ட வெற்றிப் படங்களையும் தயாரித்து இந்திய சினிமாவை விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மறுவரையறை செய்துள்ளது. தற்போது சினிமாத்துறையின் முதல் முயற்சியாக மார்ப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வையாகாம்18 ஸ்டுடியோஸ் ‘பைட்டர்’ என்னும் வான்வெளியில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.

  ‘பைட்டர்’ படத்தில் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். வையாகாம்18 ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

  Also Read : கீர்த்தி சுரேஷ் முதல் அனுஷ்கா வரை: தென்னிந்திய டாப் 10 நடிகைகளின் உண்மையான வயது!

  இந்த திரைப்படம் குறித்து வையாகாம்18 ஸ்டூடியோஸ் தலைமை செயல்பாட்டு அதிகாரி அஜித் அந்தரே கூறுகையில், வான்வெளியில் சண்டை காட்சிகள் நிறைந்த திரைப்படமானது ஒரு தனித்துவமான சினிமா அனுபவத்தை வழங்குகிறது. இதுபோன்று இந்தியாவில் எந்தவொரு படமும் வந்ததில்லை.

  ‘டாப் கன்’ என்ற ஆங்கில படத்தின் ரசிகன் என்ற முறையில் வான்வெளியில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த இந்தியாவை மையமாகக் கொண்ட ஒரு சிறந்த கதையை நான் தேடிக்கொண்டிருந்தேன். அதற்கான பதில் எனக்கு ‘பைட்டர்’ மூலம் கிடைத்துள்ளது. இயக்குனர் சித்தார்த் இதை புரிந்துகொண்டு தனது படங்களில் தனித்துவமான விஷயங்களை புகுத்தி வருகிறார். நான் அவருடன் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

  Also read : 'விக்ரம்’ படத்திற்காக டெஸ்ட் ஷூட்டை முடித்த கமல் ஹாசன், விஜய் சேதுபதி!

  இந்த திரைப்படம் குறித்து சித்தார்த் ஆனந்த் கூறுகையில், பைட்டர் திரைப்படம் எனது கனவு திட்டமாகும். அஜித் அந்தரே பார்வையும் எனது பார்வையும் ஒத்துப்போகிறது. ஆகவே நான் அவருடன் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்தப் படத்தின் மூலம் இந்திய திரைப்படத்தை உலக அளவில் கொண்டு செல்லவிருக்கிறோம்.

  இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு பிரமாண்ட திரைப்படமாக அமையும். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை மனதில் கொண்டு இத்திரைப்படம் சமீபத்திய தொழில்நுட்பத்தில் படமாக்கப்படு கிறது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பல இடங்களில் படமாக்கப்பட்டாலும் இந்த கதை உண்மையான இந்தியனைப் பற்றியதாகும். இது நமது ஆயுதப்படைகளின் வீரம், தியாகம் மற்றும் தேசபக்திக்கு வணக்கம் செலுத்துகிறது என்று தெரிவித்தார்.

  Photos : புடவையில் மிளிரும் ராஜா ராணி சீரியல் நாயகி ஆல்யா மானசா - போட்டோஸ்

  வையாகாம் 18 ஸ்டுடியோஸ் இந்தி படங்களான லால் சிங் சதா மற்றும் ஷபாஷ் மிது மற்றும் ஹாலிவுட் படங்களான ஏ கொயட் பிளேஸ் II, மிஷன் இம்பாசிபிள் 7, ஸ்னேக் ஐய்ஸ் : ஜி.ஐ. ஜோ ஆரிஜின்ஸ் அன்ட் பிடபிள்யூ பேட்ரோல் ஆகிய படங்களையும் வெளியிட உள்ளது. இதன் துணை நிறுவனமான டிப்பிங் பாயிண்ட் ஜம்தாரா, ஷீ, தாஜ்மகால் 1989 மற்றும் ரே ஆகிய தொடர்களை ஓடிடி தளங்களுக்காக தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Deepika Padukone

  அடுத்த செய்தி