கணக்குகளை சமர்பிக்கத் தயார்.. நடிகர் விஷாலுக்கு பெண் ஊழியர் சவால்..
நடிகர் விஷால் நிறுவனத்தில் பணம் ஏதும் கையாடல் செய்யவில்லை என அதன் கணக்காளர் ரம்யா விளக்கமளித்துள்ளார். போலீசார் கேட்டால் காவல்நிலையத்தில் கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க தாயராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

விஷால் - பெண் ஊழியர் ரம்யா
- News18 Tamil
- Last Updated: July 5, 2020, 7:59 AM IST
சென்னை, சாலிகிராமம் காவேரி ரங்கன் நகரில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளாக வழங்கப்பட்ட ஊதியத்தில், பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையை, வருமான வரித்துறைக்கு நடிகர் விஷால் முறையாக செலுத்தவில்லை என புகார் எழுந்தது.
பின்னர் பிடிவாரண்ட் வரை சென்ற வழக்கில் விஷால் தரப்பில் 80 சதவீதம் வருமான வரித்துறைக்கு பணத்தைக் கட்டினர். இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றதில் நிலுவையில் உள்ள நிலையில், விஷால் பில்ம் பேக்டரி நிறுவன மேலாளர் ஹரி கிருஷ்ணன் வியாழக்கிழமை இரவு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தங்களது நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா என்பவர் 45 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக கூறியிருந்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு முதலே விஷால் ஃபிலிம் ஃபேக்டரி வருமான வரித்துறைக்கு கட்டவேண்டிய டிடிஎஸ் தொகையில் இருந்து பணம் காணாமல் போவது வாடிக்கையாகி இருந்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.சோதனையில், கணக்காளர் ரம்யா டி.டி.எஸ் தொகையிலிருந்து பணத்தை கையாடல் செய்து தனது கணவர் தியாகராஜனின் வங்கி கணக்கிற்கும், தனது உறவினர்கள், நண்பர்களின் வங்கி கணக்கிற்கும் அனுப்பியது தெரியவந்ததாக புகாரில் கூறப்பட்டிருந்தது.
பணமோசடி செய்த கணக்காளர் ரம்யாவை கைது செய்து 45 லட்சம் ரூபாயை பெற்றுத் தருமாறு புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விஷால் தரப்பின் புகாரை ரம்யா மறுத்துள்ளார்.
பணம் கையாடலில் ஈடுபட்டதாக விஷால் தரப்பு கூறியுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தால், தான் பணியாற்றிய காலத்தில் உள்ள மொத்த கணக்கு வழக்குகளையும் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.
விஷால் தரப்பின் குற்றச்சாட்டை கணக்காளர் ரம்யா மறுத்துள்ளதால், யார் கூறுவது உண்மை என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணையிலாவது விஷால் நிறுவனத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது வெளிச்சத்திற்கு வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளாக வழங்கப்பட்ட ஊதியத்தில், பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையை, வருமான வரித்துறைக்கு நடிகர் விஷால் முறையாக செலுத்தவில்லை என புகார் எழுந்தது.
பின்னர் பிடிவாரண்ட் வரை சென்ற வழக்கில் விஷால் தரப்பில் 80 சதவீதம் வருமான வரித்துறைக்கு பணத்தைக் கட்டினர்.
அதில் தங்களது நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா என்பவர் 45 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக கூறியிருந்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு முதலே விஷால் ஃபிலிம் ஃபேக்டரி வருமான வரித்துறைக்கு கட்டவேண்டிய டிடிஎஸ் தொகையில் இருந்து பணம் காணாமல் போவது வாடிக்கையாகி இருந்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.சோதனையில், கணக்காளர் ரம்யா டி.டி.எஸ் தொகையிலிருந்து பணத்தை கையாடல் செய்து தனது கணவர் தியாகராஜனின் வங்கி கணக்கிற்கும், தனது உறவினர்கள், நண்பர்களின் வங்கி கணக்கிற்கும் அனுப்பியது தெரியவந்ததாக புகாரில் கூறப்பட்டிருந்தது.
பணமோசடி செய்த கணக்காளர் ரம்யாவை கைது செய்து 45 லட்சம் ரூபாயை பெற்றுத் தருமாறு புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விஷால் தரப்பின் புகாரை ரம்யா மறுத்துள்ளார்.
பணம் கையாடலில் ஈடுபட்டதாக விஷால் தரப்பு கூறியுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தால், தான் பணியாற்றிய காலத்தில் உள்ள மொத்த கணக்கு வழக்குகளையும் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் படிக்க...