ஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு

ஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு

ஆர்.கே.செல்வமணி

பெஃப்சி அமைப்பின் தலைவராக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெஃப்சி) தலைவராக மீண்டும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, பெஃப்சி என்றழைக்கப்படும்‌ தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்தில்‌ 2021-2023ம்‌ ஆண்டுக்கான தேர்தல்‌ நடைபெற்றது. இதில்‌ ஆர்‌.கே.செல்வமணி தலைவராகவும்‌, அங்கமுத்து சண்முகம்‌ பொதுச்செயலாளராகவும்‌, பொருளாளராக பி.என்‌.சுவாமிநாதனும்‌ மூன்றாவது முறையாக ஏகமனதாக போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்‌.

  இவர்களுடன்‌ துணைத்தலைவர்களாக தினா, ஜே.ஸ்ரீதர்‌, எஸ்‌.பி.செந்தில்குமார்‌, வி.தினேஷ்குமார்‌, தவசிராஜ்‌ இணைச்செயலாளர்களாக ஏ.சபரிகிரிசன்‌, ஏ.சீனிவாசமூர்த்தி, ஏ.புருஷோத்தமன்‌, ஜி.செந்தில்குமார்‌, கே.ஸ்ரீபிரியா ஆகியோரும்‌ போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்‌.

  மேலும் படிக்க: பிரேமம் படத்துக்கு முன் மலர் டீச்சர் ஆடிய சல்சா நடனம் - வீடியோ

  தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்‌ சங்கத் தலைவர்‌ என்‌.இராமசாமி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள்‌ சங்கத்தின்‌ செயலாளர்‌ ஆர்‌.வி.உதயகுமார்‌, பி.ஆர்‌.ஒ.யூனியன்‌ தலைவர் விஜயமுரளி ஆகியோர்‌ வாழ்த்தினர்‌. சில தினங்களில்‌ பதவியேற்பு விழா நடைபெற உள்ளது” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க: ‘கோப்ரா’ படப்பிடிப்பை முடித்த ஸ்ரீநிதி ஷெட்டி!

  பெஃப்சி அமைப்பின் தலைவராக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Sheik Hanifah
  First published: