Sonu Sood : 'சோனு சூட்தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்' கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்யும் ஆந்திர மக்கள்

சோனு சூட்

சோனுசூட்டின் மனித நேயத்தைப் பாராட்டி ஆந்திர மாநிலம் சித்தூரில் சோனு சூட்டின் மிகப்பெரிய கட் அவுட்டை வைத்து மாலைப்போட்டு பொதுமக்கள் பால் ஊற்றி வணங்கியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகர் சோனு சூட்டின் கொரோனா கால உதவிகளை போற்றும் விதமாக ஆந்திராவில் அவரது கட் அவுட்டுக்கு பொதுமக்கள் பால் ஊற்றி வணங்கினர்.

    நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்துக்கொடுத்தார். அதுமட்டுமின்றி தற்போது ஏழை மக்களுக்கு கொரோனா சிகிச்சைக்கு உதவி மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் உதவி என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

    சோனுசூட்டின் இந்த மனித நேயத்தைப் பாராட்டி ஆந்திர மாநிலம் சித்தூரில் சோனு சூட்டின் மிகப்பெரிய கட் அவுட்டை வைத்து மாலைப்போட்டு பொதுமக்கள் பால் ஊற்றி வணங்கியுள்ளனர். அதோடு, பொதுமக்களுக்கு உணவையும் வழங்கி "நாங்கள் இனிமேல் தொடர்ந்து பொதுமக்களுக்கு சேவை செய்யவிருக்கிறோம்.

     

     



     

     

    சோனு சூட்தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்" என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சோனு சூட் Humbled என குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published: