ஈஸ்வரன் திரைப்படத்தை கொண்டாடும் ரசிகர்கள்... முதல் நாளிலே ரூ.5 கோடி வசூல்...

ஈஸ்வரன்

பொங்கல் பண்டிகையையொட்டி சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 • Share this:
  சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஈஸ்வரன் திரைப்படம், கடந்த 14ம் தேதி வெளியானது . சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி உள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

  பல்வேறு தடைகளைத் தாண்டி இப்படம் வெளியாகியுள்ள சூழலில், சிம்புவின் அறிமுகம், கிரிக்கெட் விளையாடும் காட்சி, பாம்பு பிடிக்கும் காட்சிகள் ரசிகர்களின் ஏகோபித்த கரவொலியைப் பெற்றுள்ளன.

  திரைப்படங்களை இயக்குவதை குறைத்துக் கொண்டுள்ள இயக்குநர் பாரதிராஜா, இந்த படத்தில் பெரியசாமி என்ற கதாபாத்திரமாக நடித்து கதைக்கு வலு சேர்த்திருக்கிறார். நிதி அகர்வாலும், நந்திதாவும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். எனினும் நந்திதா இடம்பெற்றுள்ள காட்சிகள் சற்று குறைவாக இருப்பதாக ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எளிமையான தோற்றத்துடன் சிம்புவின் கதாபாத்திரத்தை நன்றாகவே வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

  பால சரவணனும், முனிஷ்காந்தும் நகைச்சுவை காட்சிகளில் கலக்கியுள்ளனர். ''நீ அசுரன்னா.... நான் ஈஸ்வரன்'' என சிம்பு பேசும் பஞ்ச் டயலாக் திரையரங்கை அதிர வைக்கிறது.

  படிக்க...தங்கம் விலை ரூ.40,000க்கு கீழ் சரிவு.. அமெரிக்க டாலர் சரிந்ததன் எதிரொலியா?

  பொங்கலை முன்னிட்டு விஜயின் மாஸ்டர் படம் திரைக்கு வந்தாலும், சிம்புவின் ஈஸ்வரன் படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதல்நாளில் 5 கோடி ரூபாயை வசூலித்துள்ள இப்படம், மேலும் வசூலை அள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு, பத்து தல என அடுத்தடுத்து சிம்புவின் படம் தயாராகி வருவதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: