ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இரண்டுமுறை ரிலீஸ் தள்ளிப்போன இந்தப் படத்தின் மூன்றாவது வெளியீட்டு தேதி அனேகமாக மே 20 அறிவிக்கப்படலாம்.
பாகுபலிக்குப் பிறகு தேசிய இயக்குனராகிவிட்டார் ராஜமௌலி. அவரது படத்துக்காக இந்தியாவே காத்திருக்கிறது. அதற்கேற்ப, இந்திய சுதந்திரத்துக்கு போராடிய இருவரது கதையை ஆர்ஆர்ஆர் படத்தில் கையிலெடுத்துள்ளார். அதில் ஒருவர் இந்து. ராமரைப் போல் அவரது தோற்றம், வீரம், குணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் முஸ்லீம். அவரது குணம் யாரை பிரதிபலிக்கிறது என்பதை படம் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். வழக்கம்போல் கதை, ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்.
Also read... இந்தியன் 2 படத்தின் தாமதத்துக்கு தயாரிப்பு நிறுவனமான லைகா தான் காரணம் - இயக்குனர் ஷங்கர்!
ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பு 2018 நவம்பரில் தொடங்கியது. 2021 ஜனவரி 8 படம் திரைக்கு வரும் என்று அறிவித்தனர். கரோனா முதல் அலையில் படப்பிடிப்பு தடைபட, பட வெளியீட்டை 2021 அக்டோபர் 13 க்கு மாற்றினர். இந்த தேதியில் படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்பதில் ராஜமௌலி உறுதியாக இருந்தார். ஆனால், படத்தில் நடித்த ராம் சரண், ஆச்சார்யா படப்பிடிப்பில் பிஸியானதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. கரோனா இரண்டாம் அலையில் படப்பிடிப்பு மேலும் முடக்கப்பட்டது. இதனால், படவெளியீட்டை 2022 ஆம் ஆண்டு கோடைக்கு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர்.
மே 20 ஆம் தேதி ஆர்ஆர்ஆர் படத்தின் ஹீரோ ஜுனியர் என்டிஆரின் பிறந்தநாள். அன்று படவெளியீட்டு தேதி அறிவிக்கப்படலாம் என்கின்றன ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajamouli