Priya Bhavani Shankar: உங்களை கல்யாணம் செய்து கொள்வதற்கான நடைமுறை என்ன? ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர்!

பிரியாபவானி சங்கர்

முரண்பாடாக நான் என் வாழ்வில் முதல் பார்வையிலேயே காதலில் விழுந்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

  • Share this:
தமிழ் திரையில் மிகவும் பிஸியாக இருக்கும் இளம் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற பின், இன்போசிஸில் சாப்ட்வேர் இன்ஜினியராக தனது தொழில்துறை வாழ்க்கையை தொடங்கிய பிரியா பவானி சங்கர் தமிழ் நியூஸ் சேனல் ஒன்றில் நியூஸ் ரீடராக அறிமுகமானார். ஊடகத்துறையில் நுழைந்த பிறகு Master of Business Administration படிப்பை முடித்தார். பின்னர் சின்னத்திரையில் சீரியலில் நடித்து ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றார். பின்னர் சின்னத்திரையில் கிடைத்த புகழ் மூலம் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

நியூஸ் ரீடராக இருந்து ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்த பிரியா பவானி சங்கர் கடந்த 2017-ம் ஆண்டில் மேயாத மான் திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற பிரியா பவனி சங்கருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன.

Also Read:    ‘மருத்துவ கட்டிப்பிடித்தல்’ தொழிலின் அனுபவங்களை பகிர்ந்த ஆச்சரியப் பெண்மணி: ஒரு மணி நேரத்திற்கு ரூ.7300 வசூலிக்கிறாராம்!

பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா சாப்டர் 1, களத்தில் சந்திப்போம், கசட தபற, குருதி ஆட்டம், ஓ மணபெண்ணே, பொம்மை, ஹாஸ்டல், ருத்திரன், இந்தியன் 2, பத்து தல படங்களில் இடம் பெற்றுள்ளார். பிரியா பவானி சங்கர் நீண்ட காலமாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். திரைத்துறைக்கு வந்த பின் பல நடிகர்களுடன் இணைத்து கிசுகிசு உருவானதால், தனது கல்லூரி நாட்கள் முதல் தற்போது வரை ராஜவேலை மட்டுமே காதலித்து வருவதாக வெளிப்படுத்தினார்.

நடிகை பிரியா பவானி சங்கர்


சோஷியல் மீடியாக்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் இளம் நடிகைகளில் பிரியா பவானி சங்கர் ஒருவர். தன்னை கடுமையாக அல்லது தகாத முறைகள் விமர்சிக்கும் நெட்டிசன்களுக்கு அவ்வப்போது தக்க பதிலடியும் கொடுப்பதில் வல்லவர். இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டா ஃபாலோயர்களுடன் ஒரு கேள்வி பதில் அமர்வை (question and answer session) நடத்தினார். தனது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்த பிரியா, அவரை திருமணம் செய்து கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்ட ரசிகர் ஒருவருக்கு பதில் கொடுத்துள்ளார் பிரியா.

Also Read:   பாக் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவை களத்தில் கடுப்பேற்றிய அஃப்ரிடி! - வைரலாகும் வீடியோ!

உங்களை திருமணம் செய்வதற்கான நடைமுறை என்ன..?” என்று ஹார்டின் ஈமோஜிகளுடன் ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு, தான் ஏற்கனவே காதலில் இருப்பதாக நினைவூட்டிய நடிகை, என்னை திருமணம் செய்து கொள்வதற்கான செயல்முறை உங்களுக்கு தெரியவில்லை என்றால் அது சிறந்தது மற்றும் பாதுகாப்பானது. ஏனென்றால் இப்போது புதிதாக ஒருவருக்கு ஓகே சொல்வது மிகவும் சிக்கலானது என்று வேடிக்கையாக கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"முதல் பார்வையிலேயே ஏற்படும் காதல் மீதான அவரது நம்பிக்கை", லெஸ்பியன், கே, பைசெக்ஸுவல் மற்றும் திருநங்கைகள் சமூகத்தைப் பற்றிய அவரது பார்வை உள்ளிட்டவை சார்ந்த ரசிகர்களின் பல கேள்விகளுக்கும் பிரியா பவனி சங்கர் பதிலளித்தார். முதல் பார்வையிலேயே வரும் காதலை நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு, எனக்கு உண்மைகள் இதில் நம்பிக்கை இல்லை. ஆனால் முரண்பாடாக நான் என் வாழ்வில் முதல் பார்வையிலேயே காதலில் விழுந்து விட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Published by:Arun
First published: