கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான யூட்யூப் தளம், மக்கள் நேரடியாக வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து அதன்மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. யூட்யூப் தளம் உலக நாடுகளில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமாக இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை 2016-ம் ஆண்டுக்குப் பிறகு யூட்யூப்பின் பார்வையாளர்களும் யூட்யூபர்களின் எண்ணிக்கையும் மிகவேகமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகள் ஊரடங்கில் யூட்யூபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், குறிப்பிடத்தக்க சிலரே தமிழ்நாடு முழுவதும் அறியப்படும் யூட்யூப் பிரபலங்களாக இருந்துவருகின்றனர். அந்தவகையில் உணவு குறித்தும் பல்வேறு புதிய விஷயங்கள் குறித்தும் தொடர்ச்சியாக வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து வரவேற்பைப் பெற்றவர் இர்பான். அவர், இர்பான் வீயூ என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். அதன் தொகுப்பாளராக அவரே இருந்துவருகிறார். 20 லட்சக்கும் கூடுதலான சப்ஸ்க்ரைபர்களை இர்பான் வைத்திருந்தார். இந்தநிலையில், அவரது யூட்யூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள இர்பான், ‘திடீரென்று என்னுடைய யூட்யூப் சேனல் முடக்கப்பட்டதாக மெயில் வந்தது. அந்த மெயிலில் விதிமுறைகளை மீறியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், என்ன விதிமுறைகளை மீறினேன் என்று குறிப்பிடவில்லை. எதற்காக முடக்கப்பட்டது என்ற காரணம் இதுவரையில் தெரியவில்லை. இதுகுறித்து யூட்யூப் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளேன். விரைவில் சேனல் திரும்பக் கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.