Home /News /entertainment /

பிரபல தெலுங்கு நடிகருக்கு ஒரு வருட சிறை தண்டனை!

பிரபல தெலுங்கு நடிகருக்கு ஒரு வருட சிறை தண்டனை!

நடிகர் மோகன் பாபு

நடிகர் மோகன் பாபு

மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய அவருக்கு ஒரு மாத கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
செக் மோசடி வழக்கில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான மோகன்பாபு, ஸ்ரீலட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரது தயாரிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான சலீம் என்ற திரைப்படத்தை இயக்கிய ஒய்.வி.எஸ். சவுத்ரிக்கு சம்பள தொகை ஒரு கோடியே 60 லட்சத்துக்கு பதிலாக ஒரு கோடியே 10 லட்சம் தரப்பட்டு உள்ளது.

அதில், 40 லட்சத்து 50,000 தொகைக்கு மோகன் பாபு காசோலை தந்துள்ளார். ஆனால் பணமின்றி காசோலை திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து மோகன் பாபு மீது வழக்கு தொடரப்பட்டு சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணையும் நடைபெற்று வந்தது.

செக் மோசடி வழக்கில் மோகன் பாபுவுக்கு ஒரு வருட சிறையுடன் 41 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய அவருக்கு ஒரு மாத கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Also Read.... காலா நடிகை கலிஃபோர்னியாவில் இன்பச் சுற்றுலா! 

சென்னை திரும்பிய ’நேர்கொண்ட பார்வை' டீம்... அடுத்தகட்ட நடவடிக்கையில் தீவிரம்...!  

சிவகார்த்திகேயனின் சயின்ஸ் பிக்‌ஷன் ஃபர்ஸ்ட் லுக் - அப்டேட் கொடுத்த இயக்குநர்! 

Also See... தேர்தல் அறிக்கை மூலமாக தேசத்தை பிரிக்கிறாரா ராகுல்  


நீட் தேர்வு ரத்து...! காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின்





தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.









Published by:Vaijayanthi S
First published:

Tags: Actor mohan babu, Crime | குற்றச் செய்திகள், Tollywood

அடுத்த செய்தி