வாழ்க்கையிலே 2 அல்லது 3 லவ் இருந்தா அது ஒன்னும் தப்பில்லையே? ஓப்பனாக பேசிய டிடி!

திவ்யதர்ஷினி

சின்னத்திரை மட்டுமின்றி இவர் சில தமிழ்த் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்

 • News18
 • Last Updated :
 • Share this:
  சின்னத்திரையில் ரசிகர்களை கவர்ந்த தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் டிடி என்று செல்லமாக அழைக்கப்பட்டு வரும் திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுககளுக்கும் மேலாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். சின்னத்திரை மட்டுமின்றி இவர் சில தமிழ்த் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தனது நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

  தனது சிறிய வயதிலேயே சன் டிவி-யில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அதன் பின் விஜய் டிவி-யில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். விஜய் டிவி-யில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி. சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை 2013-ல் பெற்றார். திரை வாழ்க்கையில் சிறந்து விளங்கிய இவருக்கு திருமண வாழ்க்கை கசப்பாக அமைந்தது.

  தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் டிடி. ஆனால் மூன்று வருடங்கள் மட்டுமே இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2017-ல் விவாகரத்து பெற்றதன் மூலம் முடிவுக்கு வந்தது. கணவரை விட்டு பிரிந்த டிடி, எப்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் என்று அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துவருகின்றனர். இந்நிலையில் தனது முடிந்து போன திருமண வாழ்க்கையை மற்றும் இரண்டாவது காதல் குறித்து பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

  சமூக ஊடகம் ஒன்றில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "கடந்த கால வாழ்க்கையை எப்போதும் நினைத்து பார்ப்பதில்லை என்றும், அது தரும் பாடத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு அடுத்து வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று பாசிட்டிவாக யோசித்து செயல்பட்டு முன்னேறி போய் கொண்டே இருக்க வேண்டும். சும்மா அழுது கொண்டே இருக்க கூடாது"என்று தெளிவாக கூறி உள்ளார்.

  https://twitter.com/i/status/1393613589433356289

  இரண்டாவது காதல் பற்றிய ரசிகரின் ஒரு கேள்விக்கு உற்சாகமாக பதிலளித்த டிடி, " அதென்ன செகண்ட் லவ்.? லவ் என்ன ஒரு வாட்டி தான் வருமா? இல்ல ரெண்டு வாட்டி தான் வருமா.? லவ் நம் வாழ்க்கையில் ஒரு பார்ட். ஒரே நேரத்தில் 4 அல்லது 5 லவ் வந்தா தான் அது தப்பு. ஆனால் வாழ்க்கையில் 2 அல்லது 3 லவ் இருக்குனா அது ஒன்னும் தப்பு இல்ல "என்று ஓபனாக பேசி உள்ளார். டிடியின் இந்த பேச்சை வைத்து அவர் விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
  Published by:Arun
  First published: