• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரபல சீரியல் தயாரிப்பாளர் திடீர் மறைவு - இரங்கல் தெரிவித்த ஜீ தமிழ்!

பிரபல சீரியல் தயாரிப்பாளர் திடீர் மறைவு - இரங்கல் தெரிவித்த ஜீ தமிழ்!

சத்யா சீரியல்

சத்யா சீரியல்

தயாரிப்பாளர் ஆர்.கே மனோகர் உயிரிழந்துள்ள தகவலை ஜீ தமிழ் சேனல் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பேஜில் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி உள்ளது.

  • Share this:
தமிழகத்தில் சன், விஜய் கலர்ஸ் உள்ளிட்ட பல பொழுதுபோக்கு டிவி சேனல்கள் இருந்து வந்தாலும் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜீ தமிழ் சேனல், தனெக்கென தனி ரசிகர் வட்டத்தை கொண்டிருக்கிறது.

பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட சீரியல்கள் என தமிழ் ரசிகர்களை தொடர்ந்து தன் பக்கம் ஈர்த்து வருகிறது ஜீ தமிழ் சேனல். அனைத்து தமிழ் சேனல்களை போலவே ஜீ தமிழிலும் நல்ல கதைக்களம் கொண்ட சுவாரஸ்யமான பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

நீதானே என் பொன்வசந்தம், யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள், செம்பருத்தி, திருமதி ஹிட்டலர், ராஜா மகள், இரட்டை ரோஜா, சின்ன பூவே மெல்ல பேசு, பூவே பூச்சூடவா, கோகுலத்தில் சீதை உள்ளிட்ட ஜீ தமிழ் சீரியல்களுக்கு மத்தியில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் முதல் ஒளிபரப்பாகி வருகிறது சத்யா சீரியல்.

ALSO READ | கண்ணனை தலை முழுகிய மூர்த்தி - இழுத்து மூடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டு கதவு

இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் நிறைய ரசிகர்களை கொண்டது திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த ஹிட் சீரியல் கடந்த முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட இந்த சத்யா சீரியலில் ஆயிஷா சத்யா என்ற கேரக்ட்ரிலும் (ரவுடி பேபி) மற்றும் நடிகர் விஷ்ணு பிரபு (அமுல் பேபி) என்ற கேரக்டரிலும் நடித்து வருகின்றனர்.

ALSO READ |  அம்மாடி வெண்பா உன் பாட்சா சவுந்தர்யாம்மா கிட்ட பலிக்குமா? பல்பு வாங்குன மொமண்ட்!

இந்த சீரியலில் நடிகை ஆயிஷாவின் கெட்டப் மற்றும் டயலாக் மாடுலேஷன் இரண்டும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீரியலுக்கு டிவி ரசிகர்களையும் தாண்டி சோஷியல் மீடியாக்களிலும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

sathya serial All Videos

இந்நிலையில் சத்யா சீரியல் குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தர கூடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சத்யா சீரியலின் தயாரிப்பாளரான ஆர்.கே மனோகர் திடீரென்று உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பிற்கு உடல்நல குறைவு காரணமா அல்லது வேறு ஏதாவதா என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

ALSO READ |  சென்னை மக்களை நம்பி வந்து ஜெயித்தேன்.. விஜய் டிவி சுனிதாவின் வெற்றி பயணம்!

தற்போது உயிரிழந்துள்ள சத்யா சீரியல் தயாரிப்பாளர் ஆர்.கே மனோகர், ஜீ தமிழில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிப்பரப்பான ஹிட் சீரியலான முள்ளும் மலரும், மேலும் ஜீ தமிழில் ஐரா மற்றும் ரியாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க தற்போது ஒளிபரப்பாகி வரும் ராஜா மகள் சீரியல் ஆகியவற்றின் தயாரிப்பாளரும் ஆவார்.

  
View this post on Instagram

 

A post shared by zeetamil (@zeetamizh)


 

தயாரிப்பாளர் ஆர்.கே மனோகர் உயிரிழந்துள்ள தகவலை ஜீ தமிழ் சேனல் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பேஜில் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சத்யா சீரியலின் திரைக்கதை எழுத்தாளர் லோபோ சாமி திடீர் என்று மரணமடைந்த நிலையில், தற்போது சீரியல் தயாரிப்பாளரின் மரணம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: