• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Pavithra Janani : இன்ஸ்டா ரீலில் தனது பாய் ஃபிரெண்டை அறிமுகப்படுத்திய பிரபல சீரியல் நடிகை..

Pavithra Janani : இன்ஸ்டா ரீலில் தனது பாய் ஃபிரெண்டை அறிமுகப்படுத்திய பிரபல சீரியல் நடிகை..

பவித்ரா ஜனனி

பவித்ரா ஜனனி

Serial Actress Pavithra Janani : சீரியல் நடிகை பவித்ரா ஜனனி தனது காதலன் இவர் தான் என்றுக் கூறி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார்.

  • Share this:
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் மக்கள் மத்தியில் எளிதில் பிரபலமாகி விடுவார்கள். ஏனென்றால் சின்னத்திரை ரசிகர்களின் ரசனைக்கேற்ப சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தனெக்கென பெரும் ரசிகர் வட்டத்தை கொண்டுள்ளது விஜய் டிவி. கொரோனா இரண்டாம் அலை லாக்டவுனுக்கு பிறகு சில புதிய சீரியல்களை களமிறக்கி இருக்கிறது . இதில் ஒன்று தான் ’தென்றல் வந்து என்னை தொடும்’ என்ற புதிய சீரியல். இந்த சீரியல் ஒளிபரப்பாக துவங்கும் முன்பே பெரும் சர்ச்சையை சந்தித்தது.

திரைப்படங்களை போலவே சீரியல்களுக்காக ப்ரோமோ மற்றும் டீசர்களை சேனல்கள் வெளியிட்டு வருகின்றன. புதிய சீரியல்களின் கதையம்சம் மற்றும் கேரக்டர்கள் மீது ரசிகர்களுக்கு ஈர்ப்பு மற்றும் சுவாரசியத்தை ஏற்படுத்தி அதை அதிகம் ரசிகர்களை பார்க்க வைப்பதற்காக வெள்ளித்திரையை போலவே சின்னத்திரையிலும் இந்த யுக்தி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் ப்ரமோ வீடியோ வெளியாகி கடும் விமர்சனத்தை சந்தித்தது. ப்ரமோ வீடியோவில் இந்த சீரியலில் வெற்றி என்ற ஹீரோ கேரக்டரில் நடித்து வரும் வினோத் பாபு, நாயகி அபிநயாவிற்கு (நடிகை பவித்ரா ஜனனி) கோவிலில் வைத்து கட்டாய தாலி கட்டுவது போல காட்டப்பட்டது.

also read : அழகூரில் பூத்தவளே! பிக்பாஸ் லாஸ்லியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..

வேறு ஒரு சூழலுக்கு தன் பக்க நியாயத்தை விளக்க இந்த செயலை ஹீரோ செய்வது போல காட்சிகள் இடம்பெற்று, டெலிகாஸ்ட் ஆவதற்கு முன்பே கடும் எதிர்ப்பை சந்தித்தது இந்த சீரியல். இந்த சீரியல் நாயகியான நடிகை பவித்ரா ஜனனி விஜய் டிவியின் ஆஃபிஸ் சீரியலில் அறிமுகமாகி மெல்ல திறந்தது கதவு, ராஜா ராணி, லக்ஷ்மி வந்தாச்சு மற்றும் சரவணன் மீனாட்சி சீசன் 2 & 3 மற்றும் ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் துணிச்சல் மிக்க பெண்ணாக நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இருக்கிறார் நடிகை பவித்ரா ஜனனி.

also read ; லாங் ட்ரெஸ் தான் உங்களுக்கு பிடிக்குமா ? ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்டைல் ட்ரை பண்ணுங்க..

சோஷியல் மீடியாவான இன்ஸ்டாவில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நடிகை பவித்ரா ஜனனியை ஃபாலோ செய்து வரும் நிலையில், அடிக்கடி தனது போட்டோ ஷூட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இவர் ஷேர் செய்வது வழக்கம். இதனை பார்க்கும் அவரது ரசிகர்கள் பலர் கமெண்ட்ஸ் செய்து நடிகையை உற்சாகப்படுத்துவார்கள். இதனிடையே இன்ஸ்டா ரீல் ஒன்றில் தனது ஆண் நண்பரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.



 




View this post on Instagram





 

A post shared by Pavithra (@pavithra.janani)





Meet my boy frend Mr.Shrek என்று கேப்ஷன் கொடுத்து இன்ஸ்டா ரீலில் இருக்கும் Shrek is love என்ற எஃபெக்டை பயன்படுத்தி பொம்மை ஒன்றுடன் ரீல் செய்து உள்ளார். இந்த வித்தியாசமான மற்றும் வேடிக்கையான ரீலை பார்த்த அவரது ரசிகர்கள் ஜாலியாக பல கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: