'வாணி ராணி' சீரியல் நடிகை விபச்சார வழக்கில் கைது!

'வாணி ராணி' சீரியல் நடிகை விபச்சார வழக்கில் கைது!
நடிகை சங்கீதா
  • News18
  • Last Updated: June 1, 2018, 9:14 PM IST
  • Share this:
பிரபல சின்னத்திரை நடிகை சங்கீதாவை விபச்சார வழக்கில் சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில் விபச்சாரம் நடப்பதாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மைக்கேல் என்பவருக்கு சொந்தமான ரிசார்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பல சின்னத்திரை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல சின்னத்திரை நட்சத்திரமான சங்கீதா இளம் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று அவருடன் இருந்த சுரேஷ் என்ற நபரும் கைது செய்யப்பட்டார். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 3 இளம் நடிகைகளையும் போலீசார் மீட்டனர்.


சென்னை ஈசிஆர் சாலைகளில் நூற்றுக்கணக்கான தனியார் ரிசாட்டுகளும், சொகுசு இல்லங்களும் உள்ளதாகவும் அதில் பெரும்பாலுமான ரிசாட்டுகளில் விபச்சாரங்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

கைதான சங்கீதா வாணி ராணி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.
First published: June 1, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்